வெள்ளி, 16 அக்டோபர், 2015

இறைவன் சிவபெருமான் எவ்வழியோ இயக்குனர் திரு.பாரதிராஜா அவ்வழியே !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!                                                                                   
உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற எனது
அன்பிற்கும் பாசத்திற்கும்உரிய
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!                                                                                                  

உங்கள் அனைவருக்கும் எனது இதயம்                                                                            
கனிந்த காலை வணக்கங்கள்.

இன்றையதினம் நான் எனது நெஞ்சிற்குள்ளாக

புதைந்து கிடக்கின்ற புகைந்துகொண்டிருகின்ற

ஒரு கருத்தினை சற்று விலாவாரியாக உங்கள்

அனைவரிடமும் மனம்விட்டு உரையாடலாம்

என்னும் எண்ணத்துடன் இந்த வலைதளத்தின்

மூலமாகஉங்களுடன்உரையாற்றிக்கொண்டு 

உள்ளேன். நிற்க !!


இரண்டு தினங்களுக்கு முன்பாக  

(முன்னாள் மதுரை மாவட்டத்திற்கு உள்ளாக 

அமைந்த) தேனி மாவட்டத்தில் 

                            " அவதரித்த "

எங்கள் இதயம்கனிந்த அன்பு இயக்குனர் 

திரு.பாரதிராஜா அவர்கள்

தனது திருவாய் மலர்ந்து கருத்து ஒன்றினை 

பத்திரிகைகள்வாயிலாக வெளியிட்டுள்ளதைப் 

பற்றித்தான் எனதுகருத்து விமர்சனமும் அமைய 

உள்ளது நேயர்களே.


நாளையதினம் ( 18-10-2015) ஞாயிற்றுக்கிழமை 

நடைபெறஇருக்கின்ற தென்னிந்திய நாடகநடிகர் 

சங்கத்தின்தேர்தலில், ஆளுகைக் குழுவிற்கு 

(Executive Committee)தமிழர்களை மட்டும் 

தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற

கருத்தினை மிக ஆணித்தரமான முறையில் 

அவர்வெளியிட்டுள்ள விதத்தினை 

பார்த்திடும்போதுஎன்னால் என்னுள் 

வெளிவரும் விலாநோகும்சிரிப்பினை அடக்கிட 

இயலாதவனாக உங்கள்அனைவரின் முன்பாக 

இந்தக் கட்டுரையை நான்வரைந்து கொண்டு 

இருக்கிறேன்.


இன்று திரு பாரதிராஜா, அவர் சார்ந்திருக்கின்ற

குலத்திற்குத் தலைவியாகவும், ஆளும் மாநிலத்

தலைமையின் நெருங்கிய ஆருயிர்த் 

தோழியாகவும்இருக்கின்ற அந்த சின்ன 

அம்மையாரைத் திருப்திசெய்திடுவதற்காகவோ 

அல்லது அவர்களிடமிருந்துவந்திருக்கும் 

உத்தரவிற்கு அடிபணிந்து இந்தபத்திரிகை 

செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்படி 

ஒருவேண்டுகோள்தனை தனது நீண்ட நெடுநாள் 

ஆசையெனஅறிவித்திருக்கிராரோ ?

யான் அறிந்திலேன் பராபரமே.


ஆனால் இந்த இடத்தில் நான் ஒரு கருத்தினை 

மிகமிகத்தெளிவாகக்குறிப்பிட்டேஆகவேண்டும். 

அது என்னஎன்றால் புராண காலம்தொட்டு 

நடைபெற்றுவருகின்றகலி காலம் வரை, 

(எனக்கு நினைவு தெரிந்த வரை) 

யார்யாரெல்லாம்தோல்வியின் விளிம்பில் 

நின்றுகொண்டு வீழ்வது இப்போதோ

இல்லை அப்புறமோ என்று பரிதவித்துக் 

கொண்டிருகிறார்களோ அவர்கள் 

அனைவரும் இறுதியாக தங்களது கரங்களில் 

எடுத்துக்கொண்டுதாங்கள் வெற்றிபெற்று 

விடலாம் எனும் நப்பாசையில்

வீசுகின்ற அணுகுண்டுதான் இந்த சாதி,மத,இன 

பிரிவுகளைகுறிப்பிட்டு அறிக்கைகளை 

வீசுபவர்களாகத்தான் நான்

இதுவரையிலும் கண்டிருக்கிறேன்.


இறைவன் சிவபெருமான் முதல் இயக்குனர் 

பாரதிராஜாவரைஇதே வழியில்தான் 

பயணித்தார்கள், பயணித்துக்கொண்டு

இருக்கிறார்கள் என்பதே எனது ஆராய்ச்சியில் 

கண்டுகொண்டஒரு முடிவு.


இறைவன் சிவபெருமான் திருவிளையாடல்கள் 

மொத்தம்அறுபத்தி நான்கு. அவைகளுள் 

தருமிக்கு பொற்கிழி வழங்கியலீலை என்றும் 

ஒன்று வரும். அதில் பாண்டிய மன்னனுக்கு

ஏற்பட்ட சந்தேகம் " பெண்களின் கூந்தலுக்கு 

இயற்கையிலேமணம் உள்ளதா அல்லவா " 

என்பது.

( அந்தக்காலத்திலேவாழ்ந்த மன்னர்கள், 

மக்களுக்கு எவ்வாறெல்லாம் பணிசெய்து

பொதுப்பணியாற்றி இருந்தார்கள் என்பதற்கு 

இந்த லீலை ஒன்றேபோதுமானது) 


அப்போது தருமிக்கு உதவிசெய்திடும் வண்ணம்

இறைவனே ( தவறான பொருள் நிறைந்த )பாடல் 

ஒன்றினைஇயற்றி அதை தருமிக்கு வழங்கிட, 

தருமியும் அதனை எடுத்துக்கொண்டு தமிழ்ச் 

சங்கம் சென்று அதன் தலைவரான பாண்டிய

மன்னனிடம் வழங்குகிறான்.பாடலின் 

உட்பொருளில் உள்ள பிழைஅறிந்திடாமல் 

பாண்டிய மன்னன் பரிசுத்தொகையாக 

பொற்காசுகள்வழங்கிட முற்படும்போது 

தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவர்

நக்கீரர் அதனைத் தடுத்து, அர்த்தத்தினை 

விளக்கிக் கூறி விட்டுஅதன்பின்னர் பரிசுத் 

தொகைதனை பெற்றுச்செல்லும்படி அவர்

தருமியிடம் கூற, செய்வது அறியாது தருமி 

சபைதனை விட்டுவெளியேறி சிவபெருமானிடம் 

நடந்தவற்றினைக் கூறிட,உடனேசினம்கொண்ட 

சிவபெருமான், தமிழ்ச்சங்கத்திற்கு வந்து 

தருமிக்குபொற்காசுகளைத் தர மறுத்ததற்கான 

காரணத்தினைக்கேட்டுதர்க்கம் செய்திட 

முற்படும்போது, அந்தப்பாட்டினில் பிழை நிறைய

உள்ளது என்று தலைமைப் புலவர் நக்கீரர் 

எடுத்து உரைக்க, சிவன்எங்கே, எந்த இடத்தில் 

பிழை என்று கேட்க, அதனை நக்கீரர் எடுத்து

உரைக்க, இறுதியில் உண்மைதான் அந்தப் பிழை 

என்பதனைஅறிந்துகொண்ட சிவபெருமான், 

நக்கீரரிடம், தனது நெற்றிக்கண்ணைக்காட்டி,


நக்கீரா !! நன்றாக என்னைப்பார் !! 

நான் எழுதிய பாடல் குற்றமா ?          

என்று கேட்க, நீரே முக்கண் முதல்வராகவும் 

ஆகுக !! உமது நெற்றிக்

கண்ணைக் காட்டியபோதிலும், உமது 

உடம்பெல்லாம் கண்ணாக்கிச்சுட்ட போதிலும்,
                                       

            " குற்றம் குற்றமே "

என்று ஆணித்தரமாக எடுத்துரைத்திட்ட போது, 

சிவன் அங்கே தனதுகைகளில்எடுத்துக்கொண்ட 

அதே ஆயுதத்தைத்தான் தற்போது நமது

இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களும் தனது 

கைகளில் எடுத்துக்கொண்டு நடப்பு தலைவர் 

திரு. சரத்குமார் அவர்களைக் காப்பாற்றும்

முயற்சியில் இறங்கியுள்ளார். 


அதுதான் சாதியை சீண்டிப் பார்ப்பது.

இறைவன் சிவன் கூறுகிறார் தனது பாடலில்  :-


அங்கம் புழுதிபட, அறவாழி நெய் பூசி,

தங்கக்கடல் மணலில் கால் பரப்பி

சங்கதனைக் கீர் கீரென அறுக்கும்

நக்கீரரோ எம்கவியை ஆராயத்தக்கவர் ?


பொருள் :-  கடற்கரைமணலில் கால்களை

பரப்பி விரித்துக்கொண்டு சங்குகளை அறுத்து

எடுத்து பிழைப்பு நடத்துகின்ற நக்கீரரோ எனது

பாடலை ஆராயத்தக்க தகுதியைப் படைத்தவர் ?


இப்போது நக்கீரர் தனது பாடலில் :-


சங்கறுப்பது எங்கள்குலம் !!

சங்கரனார்க்கு ஏதுகுலம் !!

சங்கை அறிந்துண்டு வாழ்வோம் !!

அறமே!!உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை !!


பொருள் :-  சங்கினை அறுத்து அதனை எடுத்து 

விற்றுபிழைப்பு செய்து வாழ்கின்றோம் நாங்கள்.

இறைவனே !!உன்னைப் போல நாங்கள் 

(இரந்துண்டு )பிச்சை எடுத்து உண்டு 

வாழ்வதில்லை.


எப்படி பார்த்தீர்களா நேயர்களே !!

தனது கட்சி தோற்றுவிடும் என்கின்ற நிலை 

வந்தவுடன்புராணகால சிவபெருமானில்இருந்து 

கலிகாலஇயக்குனர் பாரதிராஜா வரையிலும் 

சாதி,இன,மதவேற்றுமைகளை தூண்டிவிட்டுப் 

பார்க்கிறார்கள்.


இதனை நாடும் , நாட்டு மக்களும் உற்றுப்

பார்த்திட வேண்டும் என்ற எனது தணியாத 

ஆசையின்விளைவு, இந்தக் கட்டுரை. 

பொறுமைகாத்து படித்து எனக்கு பெருமை 

சேர்த்திட்ட அன்பு ரசிகப் பெருமக்கள்

அனைவருக்கும் எனது  இதயம் கனிந்த 

நன்றியும் அதனைத்தொடர்ந்து வணக்கமும் 

உரித்தாகட்டும்.



அன்பன். திருமலை.இரா. பாலு.