சனி, 12 மார்ச், 2016

ஆப்பசைத்த குரங்கு போல ஆனார் விஜயகாந்த் !!





எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


ஆப்பசைத்த குரங்கு ஆனார் விஜயகாந்த் !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

தமிழக தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக 
சூடு பிடிக்கத் துவங்கிவரும் இந்த வேளை
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் 
காத்திருந்தது தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.
கூட்டணி ஏற்படும் என்று மட்டுமே. ஆனால் 
அதற்கு மாறாக,திடீர் திருப்பமாக, தேமுதிக 
நிறுவனர் தலைவர் விஜயகாந்த் இந்தமுறை 
தமிழக சட்டமன்றத்தேர்தலில் தமது கட்சி 
தனித்தே போட்டியிடும் என்று பெரிய பேரிடி 
அறிவிப்பினை, அவரது கட்சியின் மகளிர்தின 
அரசியல் மகாநாட்டில் அறிவித்து தமிழக 
தேர்தலில் களத்தில் ஒரு புதுக்குழப்பத்தை 
ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும்.

எதை எதிர்பார்த்து, அவர் இப்படியொரு அதிரடி 
அறிவிப்பினை வெளியிட்டிருப்பார் என்பதை 
நாம் அலசி ஆராய்ச்சி செய்தால் நமக்கு விடை 
கீழ்க்குறித்த இந்த மூன்று அம்சத்தைத்தவிர வேறு ஒன்றும் வர வழிவகை இல்லை.

1) இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது 
திமுக தலைமையை தனது எதிர்பார்ப்பு வரம்பு
அதற்குள்ளாக கொண்டு வரவேண்டும்.
2)  இரகசியமாக அக்கட்சியோடு, தான் கூட்டணி 
பேச்சுவார்த்தை நடத்தியபோது, தான் முன்வைத்த ஏற்க முடியாத கோரிக்கைகளை, மீண்டும் அக்கட்சி (திமுக) பரிசீலனை செய்திட வைத்த்திட இந்தவகை அதிரடி அறிவிப்பு நிச்சயம் பலன்தரும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை.
3)  தனக்கு எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு உண்டு என்பதை கணக்கில் கொள்ளாமல், தனக்கு ஏதோ ஒரு மாபெரும் இமாலய பலம் இருப்பது போலவும் எனவே அதை திமுக தலைமை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதற்காக இதை இப்படிப்பட்ட 
ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

சரி. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் விஜயகாந்த் எதிர்பார்த்த மேலே குறிப்பிட்டுள்ள மூன்று விஷயங்களை திமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதா ? என்பதை நாம் முதலில் 
பார்ப்போம்.

திமுக எனும் கட்சி கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் 
அரசியல் அனுபவம் பெற்றுள்ள ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இந்த காலகட்டத்தில் அவர்கள் விஜயகாந்த் போன்று எத்தனை எத்தனயோ நபர்களை அவர்கள் அரசியல் வாழ்வினில் சந்தித்து அதன்மூலம் மாபெரும் அனுபவம் பெற்றவர்கள். மாபெரும் 
சக்தியாக1970களில்விளங்கியMGராமச்சந்திரனையே திமுக எந்த ஊர் வந்து பார் என்று கேள்விகேட்ட கட்சி அது.அதன்மூலம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பதவியை 
இழக்க நேரிட்டாலும் அதற்காக கொள்கையை விட்டுத்தந்திடாத இயக்கம் திமுக.

ஏதோ இவர் (விஜயகாந்த்)ஒரு 6 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கிறார், மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தருவதில் அந்த வாக்கு வங்கி நல்லதொரு பலனை பெற்றுத்தரும் என்பதற்காகவே, விஜயகாந்த் இழுத்த 
இழுவைக்கெல்லாம் திமுக வளைந்து கொடுத்து 45 தொகுதியில் பேரத்தைத்துவக்கி கிட்டத்தட்ட 
59 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை விட்டுத்தர 
சம்மதித்தாலும் அதனை உதாசீனம்செய்திடும் 
வகையில் விஜயகாந்த் நடந்திருப்பது என்பது 
கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல கண்டிப்புக்கும் உரியதே.  

இப்போது பிஜேபி கட்சியைப்பொருத்தவகையில்,
ஒரு தேசிய கட்சி என்பது பட்டவர்த்தமாக மாநில
கட்சியைத் தலைமைபொறுப்பில் ஏற்றுக் கொண்டு அதன்கீழ் சட்டமன்றத் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளுமா ? என்பது 
சந்தேகமே.

மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணி ஒரு குறைப் 
பிரசவத்தில் பிறந்த, தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கொண்டிருக்கும் கட்சியே ஆகும். எந்த நேரம் இழவு வரும் என்பது எவராலும் சொல்ல முடியாதது போல, எந்த நேரம் இந்த பிணி மன்னிக்கவும் இந்த அணி 
உடைந்து சுக்கு நூறாகும் என்பது அதில் உள்ள 
துரோகி வைகோ உட்பட யாரும் அறிந்திடாத 
ஒன்றே ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி சில கட்டளைகளுடன் 
பிஜேபியோடு மட்டுமே கூட்டு சேர்ந்து தேர்தலில் 
போட்டியிடும். விஜயகாந்த் நிழல்கூட அந்த 
பா.ம.க.விற்கு ஆகாது.

இப்படிப்பட்ட சூழலில் திமுக தன்னை மீண்டும் 
நாடி, ஏற்கவே முடியாத வேண்டுகோள்களை 
ஏற்கும், அதற்கு வேறு வழி இல்லை என்று தப்புக்கணக்கு போட்டு அதன்வாயிலாக 
தேமுதிக அறிவித்த தனித்துப்போட்டி என்ற அறிவிப்பு தற்போதுவரை, திமுக வால் கண்டுகொள்ளப்படாத ஒரு நிலையில், விஜயகாந்த் நிலைமை என்பது 

ஆப்பசைத்த குரங்கு போன்றதே !!

இதுதான் என்போன்ற அரசியல் ஆர்வலர்களும் 
போடுகின்ற கணக்கு ஆகும் என்று கூறி உங்கள் 
அனைவரிடம்இருந்துநன்றிகூறிவிடைபெறுவது 
உங்கள் அன்பன். திருமலை. இரா. பாலு.