திங்கள், 28 செப்டம்பர், 2015

இன்று ( 29-09-2015) உலக இதய நாள் -- நமது விலைமதிப்புள்ள இதயத்தினை ஆயுட்காலம் வரையிலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில யோசனைகளும் குறிப்புக்களும் !!







பிஸ்மில்லா-ஹிர்ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும்,


அன்பார்ந்த வணக்கம். இன்றையதினம் 

உலக இதய நாள் என்று அனைவராலும் 

மதிக்கப்படுகின்றது. இந்த நன்னாளில் 

நான் உங்கள் அனைவரையும் வேண்டிக் 

கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் அனைவரும் 

அவரவரது இதயங்களை மிகவும் பாதுகாப்பாக 

வைத்துக்கொள்ளுங்கள் என்பது மட்டுமே.  

நான் இதை ஏன், எதற்காக இவ்வளவுதூரம் 

முக்கியத்துவம் கொடுத்து உங்களிடம் 

விளக்கிக் கூறுகிறேன் என்று கேட்டால், 

நமது இதயம் தான் உச்சந்தலை 

முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள எல்லா 

இடங்களுக்கும் இரத்தத்தினை நாடி நரம்புகள் 

மூலமாக (தான் இயங்குவதன் மூலமாக) நல்ல 

அழுத்தம் கொடுத்து பரவிட ஆவன செய்திடும் 

ஒரே இயந்திரம் என்பதனை நாம் அனைவரும் 

முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும்.  

எனவே இந்த முக்கியமான பணியினைச் 

செய்திடும் இந்த இயந்திரம் இயங்குவதற்கு 

நாம் எந்தவிதமான இடையூறும் செய்திடாமல் 

இருக்க நம்மை நாம் முதலில் பழகிக் கொள்ள 

வேண்டும். அதற்கான வழிமுறைகள்:-


1)  கொழுப்புச்சத்து மிக அதிகம் உள்ள மாமிச 

உணவு வகைகள், முட்டை, வெண்ணை, நெய் 

போன்ற பொருட்களை நமது தினசரிஉணவினில் 

சேர்க்காமல் உட்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.


2)  போதை தரும் ஆல்க்கஹால் மற்றும் புகை 

பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதை  இனிமேல் 

தொடரப் போவதில்லை என்று நாம் 

அனைவரும் சூளுரைத்தல் மிக மிக அவசியம்.


3)  எவ்வளவுதான் கழுத்தினை நெறித்திடும் 

பிரச்சினைகள் வந்தாலும் அவைகளை நாம் 

சட்டை செய்யாமல் மன அழுத்தத்திற்கு இடம் 

தராமல், இன்முகத்துடன் நேர்கொள்ளும் மனத் 

திறனை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

படைத்தவன் இருக்கிறான் அவன் 

பார்த்துக்கொள்வான், என்று இறைவன்மேல் 

பாரத்தினைப் போட்டுவிட்டு நாம் மன 

மகிழ்ச்சியுடன் வாழ்தல் மிகவும் அவசியம்.



எனவே அன்பு நேயர்களே !!


இதயத்தினை பாதுகாத்துக்கொள்ள நான் 

உங்கள் அனைவருக்கும் மேலேசொன்ன 

அனைத்து விஷயங்களையும் தாங்கள் இன்று 

முதலாவது வாழ்வினில் கடைப்பிடித்து 

வாழ்ந்திடவேண்டும் என்று கேட்டுக் 

கொள்கிறேன். 

இன்று சன் தொலைக்காட்சியில் 

" விருந்தினர் பக்கம் " 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இதய 

மருத்துவ நிபுணர் திரு சொக்கலிங்கம் அவர்கள் 

கூறியதுபோல,


கடந்த காலம் என்பது உடைந்துபோன பானை !!

எதிர்காலம் என்பது மதில் மேல் உள்ள பூனை !!

நிகழ்காலம் மட்டுமே  கையில் உள்ள வீணை !!


என்பதை மனதில் நிலை நிறுத்தும் விதமாக, 

மாமிச உணவினையும், மது மற்றும் 

புகைபிடிக்கும் பழக்கம் இவைகளை அறவே 

நிறுத்தி இதயத்தினை நாம் அனைவரும் 

பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் 

என்று உறுதி ஏற்று சபதம் கடைபிடிப்போம் !!


நன்றி !!   வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக