வெள்ளி, 8 மே, 2015

புதைந்துபோய் விட்ட எண்ணக்கருத்துக்கள் இவை !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம்.இன்றையதினம் 

நான்எனது பக்கத்தில் உங்கள் அனைவருக்கும் 

கூறிட விரும்பும் கருத்து என்னவென்றால், 

நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் காதல் 

செய்து திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் 

மூன்று மாதத்திற்குள் கருத்து வேறுபாடுகள் 

அதிகரித்து விவாகம் செய்தது அதன் பிறகு 

விவாக ரத்திற்கு செல்வது எதனால் ? என்று 

யோசித்து அது சம்பந்தமான கருத்துக்களைப் 

பதிவு செய்திட விரும்புகிறேன்.


அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள் 

சொல்வார்கள் 


ஆசை அது அறுபதுநாள் !!

மோகம் அது முப்பது நாள் !!


ஆக மொத்தம் தொண்ணூறு நாள் !!

இதுதான் அன்பர்களே காதல் திருமணம்நமக்குக் 

கற்றுத்தருகின்ற பாடம் ஆகும்.  


இந்தக் காதல் செய்வது, கல்யாணம் செய்வது 

(அதிலும் முக்கால்வாசி பெற்றவர்களின் 

எதிர்ப்பையும் மீறி திருட்டுத்தனமாக 

நடைபெறுபவைகளே ஆகும்.) 


சரி. இப்படி நடைபெறும் திருமணங்கள்எத்தனை 

காலம் திருப்தியுடன் நடைபெறுகிறது என்று 

கணக்கிட்டுப்பார்த்தால் நூற்றுக்குதொண்ணூறு 

பிரிவினை கேட்டு வழக்காடு மன்றங்களுக்கு 

அலைவோர்களைத்தான் நம்மால் பார்த்திட 

முடிகிறது.  


சாஸ்திரங்கள் ஒன்றும் பொய் நிறைந்தவைகள் அல்ல. 

வேதங்கள் ஒன்றும் வெறும் பேச்சுக்கள் அல்ல. 

அந்தக்காலங்களில் எல்லாம் பெண் மற்றும் 

மாப்பிள்ளை இருவரது ஜாதகங்களையும் 

நன்கு அலசி ஆராய்ந்து பத்துப் பொருத்தம் 

பார்த்து அதன் பின்னரே திருமணதிற்கு சம்மதம் 

தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இன்றைய இளையதலைமுறையினர் 

தாங்களே ராஜாக்கள், தங்களது முடிவே 

மந்திரிசபையின் முடிவு என்று எண்ணி 

தீர்மானித்து  செயல்பட்டதன் விளைவுதான்

இந்தக் காதல் திருமணங்களும் விவாக 

ரத்துக்களும் என்பதை இன்றைய இளம் 

தலைமுறையினர் புரிந்துகொண்டு செயல்பட 

வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.


நீங்கள்தான் உங்கள்தலையில் நீங்களே 

மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டீர்கள். 

உங்களை அடுத்துவரும் தலைமுறை 

வாழ்விலாவது வசந்தம் வீசிடட்டும். வழிதந்து 

அவர்களது வாழ்வினில் ஒளிவிளக்கு ஏற்றி 

சிறப்புசெய்திடுங்கள் என்று உங்களை 

கெஞ்சிக்கேட்டுக்கொண்டு விடை 

பெறுகின்றேன்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை TR.பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக