செவ்வாய், 24 நவம்பர், 2015

மரணம் !! இதைப்பற்றிய ஒரு சிந்தனை !!








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


                               ம   ர   ண   ம் !!

எனது இல்லத்தரசியின் மூத்த உடன்பிறப்பின் 

மகள் லட்சுமி நேற்று ( 23-11-2015) பகல் 12 

மணியளவில் இயற்கை எய்தினார். எனக்கு 

அவள் மகள் முறை.

என்னை அழகு தமிழில் சித்தப்பா என்று 

அழைப்பது அவள் வழக்கம். 


அவளது மரணம், மனதளவில் எனக்கு 

ஒரு பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது. அதன் 

எதிரொலியே இந்தக் கட்டுரை. என் சோகத்தை 

உங்களிடம் நான் சிறிதுநேரம் பகிர்ந்துகொள்ள 

என்னை அனுமதியுங்கள்.

நன்றி !! வணக்கம் !!

        

                                மரணம் !!


மரணம்தான் எத்தகைய மகத்துவத்தை 

தன்னுள் சுமந்துகொண்டு இருக்கிறது !!


அதிலும், குறிப்பாகச்சொல்லவேண்டுமென்றால் 

நெருங்கிய உறவினர்களிடையே நிகழும் 

மரணம்,நம் உள்ளம் என்னும் ஆடையில் 

இதுவரையிலும் படிந்திருக்கும் அழுக்குகளை, 

சோகம் என்னும் சவக்காரம் கொண்டு சலவை 

செய்து கண்ணீர் எனும் தண்ணீர் கொண்டு 

அலசி, பிழிந்து  சுத்தம் செய்வதில்தான் மனம் 

எவ்வளவு லேசாகிறது !!


ஒவ்வொருஉறவினராகவந்துஇறந்தவரது

உடலைப் பார்த்திட வரும்போதெல்லாம் அங்கே 

எழுகின்றஒட்டுமொத்தஅழுகைஒலி,அதிகாலை 
நேரத்து உலகை எழுப்பிடும் புள்ளினங்களின் 

தரும் ஓசையைக்கூடவாயடைத்திடச்செய்கிறது.

இறந்தஉடலைத்தூக்கிக்கொண்டு,மயானக்கரை 

புறப்படுகின்றவரையிலும்,அந்தவீட்டில் 

இதேநிலைதான் நீடிக்கிறது.


இன்றிறந்த பிணத்தைச் சுற்றி !!

இனிச்சாகும் பிணங்கள் அழுதனவாம் !!

என்னும் பட்டினத்தாரின் கூற்றுப்படிதான்இங்கே 

எல்லா மரணங்களும் நிகழ்கின்றன.


இறந்தாரை என்றும் 

மறந்தாரில்லை !!


இதுகிறித்துவமதத்தாரின்கல்லறைத்தோட்டத்து

வாசகம். இதன் அடுத்த வரிதான் என்னை 

மேலும் சிந்திக்க வைத்திட்ட வரிகள்.


இன்று உனக்கு !! நாளை எனக்கு !!


உலகினில் இறைவன் படைக்கின்ற 

எல்லா உயிரினங்களும் என்றாவது ஓர் நாள் 

மரித்துத்தான் போகின்றது.


ஆனால்மனிதராகபிறந்தஅந்தமகோன்னத 

பிறவியில் மட்டுமே, மனிதத்தன்மையோடு

வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனைபேர் என்று 

கணக்கெடுத்துப்பார்த்தால் வருகின்ற விடை   

என்னவோ 1௦௦ க்கு ஒற்றை இலக்கினில்தான்.


அன்போடு வாழ்ந்து, அறிவு கொண்டு 

சுற்றங்களையும் நட்பினங்களையும், 

அரவணைத்து வாழ்ந்து தெய்வங்களென 

மறைந்த சுற்றத்தார்களை நான் இந்தத் 

தருணத்தில் எண்ணி, விழிகளில் வழிந்து 

ஓடிடும் கண்ணீரை துடைத்தபடியே கைகூப்பி 

வணங்கி விடைபெறுகிறேன்.



திருமலை.இரா.பாலு.




ஞாயிறு, 8 நவம்பர், 2015

http://strictlyadultsonly.blogspot.in/2015/11/blog-post_9.html ஏன்தான் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுதோ ?




பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய எல்லாம் வல்ல 


அல்லாஹ் வின் திருப்பெயரால் இங்கே 


எழுதிடத் துவங்குகின்றேன்.


மழைக்காக உலகிலே எந்தக் கவிஞனும் 

செய்திடாத ஒரு மாபெரும் சிறப்பினை அந்த 

மழைக்கு அளித்து அதற்காக 

                              வான் சிறப்பு !!
என்று பெயரில் தனி ஒரு அதிகாரத்தை எடுத்து 

அதில் பத்து குறளை எழுதி மழைக்குப்பெருமை 

சேர்த்திட்ட புலவன் இப்பூவுலகினில் 

திருவள்ளுவரைத்தவிர வேறு யார் இருந்திட 

முடியும் ?


திரை உலகினைப் பொறுத்தவரை இந்த மழை 

என்பது அங்கே காதலனும், காதலியும் 

நனைந்துகொண்டே ஆடியும் பின்னர் 

பாடியும் அந்தக் காம உணர்வினை 

வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே 

அமைந்திட்டாலும் கூட, அந்த சூழ்நிலையை 

பாட்டுக்கோர் தலைவன் பட்டுக்கோட்டை 

கல்யாணசுந்தரம், ஏழை அழுகின்ற 

கண்ணீருக்கு இணைசெய்து எழுதிய பெருமை 

அவரைத்தவிர வேறு எந்தக் கவிஞனுக்கும் 

இல்லை என்பதனை நான் இங்கே 

மெத்த பணிவன்புடன் கோடிட்டுக்காட்டிட 

பதிவு செய்திடக் கடமைபட்டுள்ளேன்.



சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே !!

மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு 

அங்கே !!

கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றிவியர்வை 

போலே !! 

அவன் கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீர்த்துளி 

போலே !!


என்று பாடி மழைத்துளியை ஏழை விடுகின்ற 

கண்ணீர்த்துளிக்கு இணைவைத்துப் பாடிய ஒரே 

ஒப்பற்றகவிஞன்நமது பட்டுக்கோட்டைதான். 


திருவள்ளுவர் மழைக்காக எழுதிய பத்து 

குறள்களில் எனக்கு மிகவும் பிடித்த குறள் 

இதுதான்.


அதிகாரம்  :-  வான் சிறப்பு.

குறள் எண் :-  15.


கெடுப்பதூஉங்கெட்டார்க்குச்சார்வைமற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை... ... ...


விளக்கம் :-  மழை பெய்யாமல் உழவர்களை 

அழிப்பதும்பின்னர் நின்று பெய்து உழவர்களை 

வாழ வைப்பதும் அந்த மழையே ஆகும். 

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 

சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.

வியாழன், 5 நவம்பர், 2015

உண்மையான தீபாவளியே நமக்கு அப்போதுதான் !! சோட்டா ( சிறிய)ராஜனைப் பிடிச்சாச்சு !! படா ( பெரிய) இராணியைப் பிடிப்பது எப்போது ?







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



உலகம் முழுவதும் அன்புடனும் நல்ல தூய 

தமிழ்ப் பண்புடனும் வாழ்ந்து வருகின்ற என் 

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் இந்த இனிய காலை

வேளையில் எனது உள்ளங்கவர்ந்த, அன்பு 

நிறைந்த, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க 

கடமைப்பட்டுள்ளேன். நிற்க !!


இன்றையதினம் இந்தோனேசியாவில் உள்ள 

பாலித்தீவிற்கு பாலியல் சுகம் காண வந்திருந்த 

சோட்டா இராஜன் அங்கே இன்டர்போல் என்னும் 

தர்ம தேவதையின் பிடியில்சிக்கிசின்னாபின்னம் 

ஆகி ( இந்திய நாணய மதிப்பில் 5,௦௦௦ கோடிக்கு 

மேலாக ஆஸ்தி பாஸ்திகளைத் தன்னகத்தே 

கொண்ட ( இதுதவிர சிங்கப்பூரில் ஏகப்பட்டதங்க 

நகைக்கடைகள் வேறு ) அந்தப் பெருமகனார், 

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். 

இறுதியில் தர்மமே வெல்லும் எனும் 

தாரகத் திருமந்திரத்தின் அடிப்படையில் 

கைகளில் விலங்கிடப்பட்டுஇன்றோ,நாளையோ 

அல்லது இன்னும் சில  தினங்களிலோ இந்தியா 

அழைத்துவரப்படப் போகிறார் என்கின்ற 

நெஞ்சம் இனித்திடும் சேதி கேட்டுத் துள்ளித் 

திரிகின்ற நம்முடைய அதே நெஞ்சம் கேட்கின்ற 

கேள்விதான் இன்றையதினம் இங்கே 

கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு 

உள்ளது என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


ஆம். உண்மைதான். இன்று சோட்டா இராஜன் 

பிடிபட்டுவிட்டார். அனால் இந்தத் தமிழகம் 

அதில் வாழும் அத்தனை மக்களாலும் இதய 

வெறி கொண்டு அழைக்கப்படும் படா இராணி 

அம்மையார் அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் ?

என்பது ஒன்றே நமது இதயங்களைத் துளைத்து 

கொண்டிருக்கும் ஒரே கேள்வி. மதிப்பிற்குரிய 

எனது அன்புத் தந்தைஅடிக்கடிஒருவிஷயத்தைப் 

பற்றிச்சொல்லிக்கொண்டே இருப்பார்கள் :-


சிலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்.

பலரைப் பலகாலம் ஏமாற்றலாம்.

                          ஆனால் 

எல்லோரையும் எப்போதும் 

ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.


என்று. அதுபோல விரைவில் அவரும் பிடிபட்டு 

சிறைச்சாலையின் கம்பிகளை எண்ணப்போகும் 

நாள் வெகு தொலைவினில்இல்லை.அன்றுதான் 

நம்மில் அனைவருக்கும் உண்மையானதீபாவளி 

என்று சொல்லி உங்கள் அனைவரிடமும் அன்பு 

வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.


நன்றி!! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.