செவ்வாய், 24 நவம்பர், 2015

மரணம் !! இதைப்பற்றிய ஒரு சிந்தனை !!








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


                               ம   ர   ண   ம் !!

எனது இல்லத்தரசியின் மூத்த உடன்பிறப்பின் 

மகள் லட்சுமி நேற்று ( 23-11-2015) பகல் 12 

மணியளவில் இயற்கை எய்தினார். எனக்கு 

அவள் மகள் முறை.

என்னை அழகு தமிழில் சித்தப்பா என்று 

அழைப்பது அவள் வழக்கம். 


அவளது மரணம், மனதளவில் எனக்கு 

ஒரு பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது. அதன் 

எதிரொலியே இந்தக் கட்டுரை. என் சோகத்தை 

உங்களிடம் நான் சிறிதுநேரம் பகிர்ந்துகொள்ள 

என்னை அனுமதியுங்கள்.

நன்றி !! வணக்கம் !!

        

                                மரணம் !!


மரணம்தான் எத்தகைய மகத்துவத்தை 

தன்னுள் சுமந்துகொண்டு இருக்கிறது !!


அதிலும், குறிப்பாகச்சொல்லவேண்டுமென்றால் 

நெருங்கிய உறவினர்களிடையே நிகழும் 

மரணம்,நம் உள்ளம் என்னும் ஆடையில் 

இதுவரையிலும் படிந்திருக்கும் அழுக்குகளை, 

சோகம் என்னும் சவக்காரம் கொண்டு சலவை 

செய்து கண்ணீர் எனும் தண்ணீர் கொண்டு 

அலசி, பிழிந்து  சுத்தம் செய்வதில்தான் மனம் 

எவ்வளவு லேசாகிறது !!


ஒவ்வொருஉறவினராகவந்துஇறந்தவரது

உடலைப் பார்த்திட வரும்போதெல்லாம் அங்கே 

எழுகின்றஒட்டுமொத்தஅழுகைஒலி,அதிகாலை 
நேரத்து உலகை எழுப்பிடும் புள்ளினங்களின் 

தரும் ஓசையைக்கூடவாயடைத்திடச்செய்கிறது.

இறந்தஉடலைத்தூக்கிக்கொண்டு,மயானக்கரை 

புறப்படுகின்றவரையிலும்,அந்தவீட்டில் 

இதேநிலைதான் நீடிக்கிறது.


இன்றிறந்த பிணத்தைச் சுற்றி !!

இனிச்சாகும் பிணங்கள் அழுதனவாம் !!

என்னும் பட்டினத்தாரின் கூற்றுப்படிதான்இங்கே 

எல்லா மரணங்களும் நிகழ்கின்றன.


இறந்தாரை என்றும் 

மறந்தாரில்லை !!


இதுகிறித்துவமதத்தாரின்கல்லறைத்தோட்டத்து

வாசகம். இதன் அடுத்த வரிதான் என்னை 

மேலும் சிந்திக்க வைத்திட்ட வரிகள்.


இன்று உனக்கு !! நாளை எனக்கு !!


உலகினில் இறைவன் படைக்கின்ற 

எல்லா உயிரினங்களும் என்றாவது ஓர் நாள் 

மரித்துத்தான் போகின்றது.


ஆனால்மனிதராகபிறந்தஅந்தமகோன்னத 

பிறவியில் மட்டுமே, மனிதத்தன்மையோடு

வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனைபேர் என்று 

கணக்கெடுத்துப்பார்த்தால் வருகின்ற விடை   

என்னவோ 1௦௦ க்கு ஒற்றை இலக்கினில்தான்.


அன்போடு வாழ்ந்து, அறிவு கொண்டு 

சுற்றங்களையும் நட்பினங்களையும், 

அரவணைத்து வாழ்ந்து தெய்வங்களென 

மறைந்த சுற்றத்தார்களை நான் இந்தத் 

தருணத்தில் எண்ணி, விழிகளில் வழிந்து 

ஓடிடும் கண்ணீரை துடைத்தபடியே கைகூப்பி 

வணங்கி விடைபெறுகிறேன்.



திருமலை.இரா.பாலு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக