திங்கள், 13 ஜூன், 2016

வெற்றி பெற்றது மதுவின் அரசாட்சி !! தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!






வெற்றிபெற்றதுமதுவின்அரசாட்சி  !!
தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!





அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் இனிமை நிறைந்த காலை 
வணக்கங்கள்.

நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் 
தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து தேர்தல் 
முடிவுகள் பற்றிய கருத்துக்கணிப்புக்கள், அது 
தேர்தலுக்கு முந்தியதாக இருந்தாலும் சரி, 
அல்லது பிந்தியதாக இருந்தாலும் சரி, எல்லா 
கணிப்புக்களும் என்ன சொன்னது என்றால் 
தி.மு.க. தலைமையிலான கூட்டணி அனேக 
இடங்களைக் கைப்பற்றும் அதுவேஆட்சியையும் 
பிடிக்கும் என்றே மக்களுக்கு தகவல் தந்தது.


ஆனால், முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியில் 
வந்த வேளையில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போனதாகவே நடந்தது. இது ஏன்,எப்படி நடந்தது, என்பதை அரசியல் ரீதியாக நாம் அலசி ஆராயந்திடத்தான் இந்த கட்டுரை உங்களுக்குத் தரப்படுகின்றது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

திராவிட முன்னேற்றக்கழகம் இந்த தேர்தலில் 
தோல்வியைத் தழுவியதற்கு, நான் சொல்லும் 
முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த 
கட்சி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும் 
போடுகின்ற முதல் கையெழுத்து எதற்கு என்று 
கேட்டால், தமிழகத்தில் " முழு மது விலக்கு "
என்ற கோப்பில்தான், என்று மேடைக்கு மேடை 
தளபதி திரு. மு.க. ஸ்டாலின் முழங்கியதுதான் 
என்பதே எனது கணிப்பு அன்பர்களே.

தமிழ்நாட்டில், முதன்முதலாக, 1971 ம் ஆண்டு 
மது விலக்கு தளர்த்தி தாராளமாகமதுவிற்பனை 
செய்திடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.அதன் 
பிறகு அதன் கொடுமை, ஏழை மக்கள் தங்களது 
வருமானம்அனைத்தையும்வீட்டுசெலவுகளுக்கு 
தராமல், குடித்தே காலி செய்கின்றனர் என்ற விபரம் அறிந்த அரசாங்கம் மீண்டும் 1974ம் ஆண்டு முதல் முழுமதுவிலக்கு அமல் செய்திடப்பட்டது.

அதன் பிறகு, தி.மு.க. வை உடைத்து, தனியாக 
அண்ணா தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி 
ஆட்சியைப் பிடித்த மறைந்த நடிகர் MGR இங்கே 
மீண்டும் 1980 ம் ஆண்டு வாக்கில் மது விற்பனை 
செய்திட அனுமதித்தார் என்பது வரலாறு.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக, குடித்துக்குடித்துப் பழக்கப்பட்ட ஒருவன் (அப்போது அவன் வயது சுமார் 20 என்று வைத்துக்கொள்வோம். இன்று அவனது வயது 56. ஆக இன்று 15 வயது பையன் முதல் 56 வயது வரை குடிகாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்) 
திமுக மீண்டும்இங்கே ஆட்சிக்கு வந்தால் இங்கே இனிமேல்  மது விற்பனை தடை செய்யப்பட்டு விடும்  என்ற நிலைமையை உணர்ந்த அந்தக் குடிகாரர்கள் சமுதாயம் தங்களது வாக்குகளை கட்சி பேதம் இல்லாமல், ஆளும் அஇஅதிமுக வுக்கு வாக்களித்தார்கள். அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.இதுதான் உண்மை.

அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் யாரும் மக்களுக்கு நல்லது செய்திடும்வகையில் தேர்தல் அறிக்கையில்திட்டங்களை அறிவித்தால், அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை இந்தத் தேர்தல் மிகத்தெளிவாக 
படம் பிடித்துக் காட்டி விட்டது என்பதே உண்மை.

ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் 

வெற்றிபெற்றதுமதுவின் அரசாட்சி !!
தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!

என்று சொல்லி எனது கட்டுரையை நான் நிறைவுசெய்கிறேன்அன்புத்தமிழ்நெஞ்சங்களே!!

நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக