வியாழன், 29 டிசம்பர், 2016
சிரிப்புத்தான் வருகுதையா !! அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர் தேர்வு பார்க்கின்றபோது !!பாகம் எண்.2. ( தொடர்ச்சி)!!
அது அவர்களது கட்சியின் உள்விவகாரம் என்பது உண்மை !! மறுக்க முடியாத உண்மை !! என்று சொன்னாலும் அதில் அந்தக்கட்சியின்அடிமட்டத் தொண்டர்களது ஆழமான மனதில் இருக்கும் உண்மையான, விசுவாசமான கருத்துக்களுக்கு, அவர்களின் சுதந்திரமான எண்ணங்களுக்கு உரிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுஇருக்கிறாரா? என்ற கேள்விக்கு ஒரு தமிழக அரசியல் ஆர்வலர் என்கின்ற முறையில் என்னால்
இரண்டாவது, தான் ( மறைந்த MGR ) ஜப்பான் நாட்டில் உலகம் சுற்றிய வாலிபன் படம் எடுத்தபோது அங்கே அவர் அந்நியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டு, அதனை அதன் புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்து மறைந்த
அப்படி துரோகத்தால் உருவாகிய கட்சி 1976 தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்
சரி. அவரும் மறைந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்து ஜானகி அணி என்றும் ஜெயலலிதா அணி என்றும் இருகூறுகளாக பிளவு பட்டு பிறகு ஜானகி அணி சிதைந்து போய் அதன் பிறகு அது ஜெயால் கவர்ந்து இழுக்கப்பட்டு கபளீகரம்செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் இந்த ஜெ யால்பராமரிக்கப்பட்டு, அதன்பிறகு 1991-1996 என்று 5ஆண்டுகள் ஜெ ஆளுகைக்கு தமிழ்நாடு ஆட்பட்ட போது என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.
எல்லாமே பணம் பண்ணுகின்ற வேலைதான் அங்கே மறைந்த ஜெயால் நடத்தப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் மூல ஆதாரமே அந்தக் காலகட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை இந்த நாடே அறியும். அதன்
அரசியலில் மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது பல
2001-2006 நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் இங்கே மறைந்த ஜெயாவின் தலைமையில் ஆட்சி மாற்றம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அரங்கேற்றம் ஆனது. இதைத்தெரிந்தும்தெரியாதது போல ஜெயலலிதா மவுனம். எல்லாமே வசூல் வேட்டைதான். ஜெயலலிதாவிடம் பணம்
லேபிள்கள்:
அரசியல்,
உங்களது பார்வைக்கு,
கட்டுரை
செவ்வாய், 6 டிசம்பர், 2016
சமரசம் உலாவும் இடம் எது ? கவிஞர் மருதகாசியின் படைப்பினில்.......இதோ...உங்களுக்காக....
சமரசம் உலாவும் இடம் எது ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள் உரித்தாகுக.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அது 1952ம் ஆண்டு. கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கருப்பு-வெள்ளை திரைக்காவியம்தான்
ரம்பையின் காதல்
இதில் மறைந்த குணச்சித்திர நடிகை பானுமதி,
சிரிப்பு நடிகர் KA.தங்கவேலு, வில்லன் நடிகர்
MN நம்பியார், TS பாலையா,SA அசோகன் மற்றும்
MN இராஜம் ஆகியோர் நடித்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்களை மறைந்த கவிஞர்கள்குலத்திலகங்கள் A.மருதகாசி, தஞ்சை ராமதாஸ் இருவரும்இயற்றிட, வெற்றி
இசைஇயக்குனர்TR.பாப்பாஇசையில்வெளிவந்த
மாபெரும் வெற்றிக் காவியம்தான் அது.
அதில், வாழ்க்கையின் உண்மை நிலையை, மனித வாழ்வின் இறுதி வடிவத்தை, சுடுகாட்டு மயானத்தில் கதாநாயகன் சோகத்தோடு அமர்ந்திருக்க, ஒரு சிவனடியார்பாடுவது போன்ற காட்சி. இது மனித வாழ்வின் உண்மை வடிவத்தை புடம்போட்டு, தோல்
உரித்துக்காட்டிடும் வகையில் பாடல் ஒன்று இடம் பெற்றது. கவிஞர் A.மருதகாசி இயற்றிய சிறப்புப் பாடல் அது. தற்போது உள்ள சூழலுக்கு இந்தப்பாடல் மிகமிகநன்றாகவேபொருந்துகிறது
இப்போது நாம் பாடலைப் பார்ப்போமா நேயர்களே !!
https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4
மேல்குறித்த வலைதள முகவரியைத் தனியாக
அச்சிட்டு க்ளிக் செய்தால், அந்தப்பாடலை நீங்கள் முழுவதுமாக ஒலி.ஒளிக்காட்சியில் கண்டு மகிழ்ந்திடலாம்.வெண்கலக்குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த சீர்காழி S. கோவிந்த ராஜனின் மறக்க முடியாத காவியப்பாடல் அது.
பாடல் இதோ :-
சமரசம்...உலாவும்..இடமே.... !!
நம் வாழ்வில் காணா !!...
சமரசம்...உலாவும்..இடமே...!!
( சமரசம்)
ஜாதியில் மேலோர் என்றும் !!
தாழ்ந்தவர் கீழோர் என்றும் !!
பேதமில்லாது..எல்லோரும் முடிவில் !!
சேர்ந்திடும் காடு...தொல்லை இன்றியே !!
தூங்கிடும் வீடு...உலகினிலே இதுதான் !!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் !!
இடமே !!...
( சமரசம்)
ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ?
அறிஞன் எங்கே ? அசடனும் எங்கே ?
ஆவிபோனபின் கூடுவார் இங்கே !!
ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !! ....
( சமரசம்)
சேவை செய்யும் தியாகி !!
ஸ்ருங்கார போகி !!
ஈசன் பொற்பாதம் தன்னை !!
நாடிடும் யோகி !! எல்லோரும் !!
இங்கே ஒன்றாய்உறங்குவதாலே !!
உண்மையிலே இதுதான் நம் !!
வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !!
( சமரசம்)
இன்றைய தினம் தமிழக முதல்வர்
இறுதி சடங்கு நடைபெறுகின்ற இந்த
நேரத்தில், இந்தப் பாடல் எனது நினைவலையில் எழுந்ததால், நான் இந்தப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
ஆழ்ந்த வருத்தத்துடன் !!
மதுரை. TR.பாலு.
வியாழன், 1 டிசம்பர், 2016
சன் தொலைக்காட்சி நிறுவனநிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!
சன் தொலைகாட்சி நிறுவன
நிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
கடந்த சட்டமன்றத்தேர்தல் 2016 மே மாதம்
நடைபெறுவதற்கு முன்பாக, சுமார் 6 மாத
காலங்களுக்கு முன்பாக வரையிலும் நடிகர்
விஜயகாந்த்துடன் ஒருவேளை தேர்தல்
உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நப்பாசையின்
அடிப்படையில், சன் தொலைகாட்சி, மற்றும்
அதன் அனைத்து கிளை தொலைகாட்சி
நிறுவனங்களில், அவரது திரைப்படங்கள் எந்தவித தங்கு தடையுமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. தப்பே இல்லை. இதே காரணத்திற்காகவே நடிகர் சரத்குமார் நடித்த படங்களும் ஒளிபரப்பப் பட்டு வந்தது. ஆனால், நம்மிடம் (திமுகவிடம்)ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதாக, இந்த இரு
நடிகர்களும் நாடகமாடி, அதனை தங்களுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆளும் கட்சியோடு, அரசியல் புரோக்கர் கலிங்கப்பட்டி துரோகி மூலம் அதிக தொகை வாங்குவதற்காகவே செயல்பட்டனர்
என்பது நமக்கு பின்னாளில் தெரியவந்தது.
எப்படி என்றால், மதுரை கருப்பன் மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணியில் இணைந்ததும், அதுபோலவே நடிகர் ஜாதிக்கட்சி சொந்தக்காரர் சரத்குமார், ஆளும்கட்சியோடு மானம் மரியாதை இழந்து கூட்டு வைத்துக்கொண்டதன் மூலம் வெளிப்பட்டு, அவரவர்கள் செய்த துரோகத்திற்கு
பலன் கிடைத்ததன் வாயிலாக, ( எப்படி பலன் கிடைத்தது ?அதுவரை மதுரை கருப்பன் நடிகர் விஜயகாந்த் கட்சி பெற்றிருந்த கட்சி அங்கீகாரம், மற்றும் தேர்தல் சின்னம் காப்புரிமை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு இருந்தது, குறைந்த சதவிகிதம் ஒட்டு கூட வாங்கிட
முடியாத காரணத்தால் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழந்ததன் மூலமாக, கட்சிக்கு கிடைத்திருந்த அங்கீகாரம்
மற்றும் தேர்தல் சின்ன உரிமை,ஆகியவைகளை
இழந்து அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர்) மக்களின் பேராதரவை இழந்து தமிழ்நாட்டு அரசியலிலிருந்தே அவர்கள் இருவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட சூழ்நிலையில்,
மீண்டும் அவர்கள் இருவருக்கும் அதாவது செத்துப்போன பாம்புக்கு பால் ஊற்றி உயிர் வர வழைத்திடும் வண்ணம் ஏன்,எதற்காக, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் நடித்த
படங்களை விடாமல், ஓயாமல்,ஒழியாமல், படங்களை சன் TV மற்றும் சன் லைப் டிவி ஆகியவை வெளியிட்ட வண்ணம் இருப்பதன் காரணம் என்ன ?
திமுகவை கழுத்தறுத்த இவர்கள் படங்களை அங்கே தொலைக்காட்சியில் காட்டுவதுதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் அவரால் அரும்பாடுபட்டு காப்பாற்றப்பட்டு, தமிழனுக்கு,தமிழ் இனத்துக்கு,தமிழ் மொழிக்கு பாடுபடும் ஒரே அரசியல் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காட்டப்படும்
விசுவாசமா ? இல்லை முத்தமிழ் அறிஞரின் அன்புக்கு பாத்திரராக இருந்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முரசொலி என்ற வார்த்தையை தனது பெயருக்கு அடைமொழியாக வைத்து திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை வளர்ப்பது ஒன்றே தனது தலையாய களப்பணி மற்றும்
உயிர்மூச்சு என்று கருதி இறுதிவரை வாழ்ந்து மறைந்த முரசொலி மாறனுக்கு காட்டுகின்ற நன்றிக்கடனா ?
தயவு செய்து பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள
திரு. கலாநிதி மாறன் அவர்களையும் திரு தயாநிதி மாறன் அவர்களையும் இந்தக் கட்டுரையின் வாயிலாக கேள்வி கேட்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தக் கட்டுரை அவர்கள் இருவரின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ நான் அறிந்திலேன். ஆனால் தயவுசெய்து
இனியாகிலும் அந்த அரசியலில்இரண்டு செல்லாக்காசாகிப்போன நடிகர்களின் படங்களை தொலைக்காட்சியில் திரையிடாமல்
இருந்து நமது இயக்கத்துக்கு பெருமை சேர்த்துத்தர வேணுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR.பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)