சிரிப்புத்தான் வருகுதையா !! அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர் தேர்வு பார்க்கின்றபோது !!பாகம் எண்.2. ( தொடர்ச்சி)!!
சிரிப்புத்தான் வருகுதையா !!
அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர்
தேர்வு பார்க்கின்ற போது !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய காலை
வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
ஒருவழியாக நேற்றையதினம் சென்னையில்
கூடிய ஆளும் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
தங்கள் கட்சிக்கு மறைந்த ஜெயலலிதாவிற்கு
பிறகு ஒரு புதியதோர் பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அது அவர்களது கட்சியின் உள்விவகாரம் என்பது உண்மை !! மறுக்க முடியாத உண்மை !! என்று சொன்னாலும் அதில் அந்தக்கட்சியின்அடிமட்டத் தொண்டர்களது ஆழமான மனதில் இருக்கும் உண்மையான, விசுவாசமான கருத்துக்களுக்கு, அவர்களின் சுதந்திரமான எண்ணங்களுக்கு உரிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுஇருக்கிறாரா? என்ற கேள்விக்கு ஒரு தமிழக அரசியல் ஆர்வலர் என்கின்ற முறையில் என்னால்
இல்லை !! என்கின்ற பதிலைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
ஏனென்று கேட்டால், அந்தக் கட்சி, அதை ஒரு சராசரி தகுதி வாய்ந்த அரசியல் கட்சி என்று அழைக்கவே என் மனம் மறுக்கின்றது இது முதல் விஷயம்.
இரண்டாவது, தான் ( மறைந்த MGR ) ஜப்பான் நாட்டில் உலகம் சுற்றிய வாலிபன் படம் எடுத்தபோது அங்கே அவர் அந்நியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டு, அதனை அதன் புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்து மறைந்த
இந்திராகாந்தியிடம் தெரிவித்து, அதைவைத்து திமுக வை பலவீனப்படுத்த வேண்டும் அதை உடைக்க வேண்டும், தனக்கு ஜால்ரா அடிக்க தமிழகத்தில் ஒரு இயக்கம் வேண்டும் என்று ஒரே எண்ணத்தில்,துரோகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சிதான் மறைந்த MGR தொடங்கியஅஇஅதிமுகஎன்பதுநம்மில் இக்கால இளைஞர்கள் பலர் தெரிந்திருக்க வாய்ப்பு
இல்லை என்பதால் அதனை மீண்டும் இங்கே நான் திவு செய்கிறேன்.
அப்படி துரோகத்தால் உருவாகிய கட்சி 1976 தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்
அதாவது 1989 வரை இங்கே ஆட்சி செய்து சாதித்தது என்ன என்று கேட்டால், ஒரு மண்ணும் இல்லை, புரட்டுத்தலைவரின் அடிவருடிகள் ஏராளமான நபர்களுக்கு அரசின்புறம்போக்கு நிலங்களை பட்டா நிலங்கள் என்று பெயர் மாற்றி அதனை அந்த அடிவருடிகளுக்கு
( மறைந்த ஜேப்பியார்,ஐசரிவேலன்,ACசண்முகம்
இதுபோன்ற இன்னும் ஏராளமான பலர்) தாரை வார்த்துக்கொடுத்து அவர்கள் அந்த நிலங்களில் இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கி மக்கள் பணத்தை கல்வியின் பெயரால் சுரண்டி அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதைத்தவிர வேறு எந்த நலத்திட்டங்களும் இந்த MGRஇன் 13 ஆண்டுகால
ஆட்சியில் இந்தத்தமிழகம் கண்டுள்ளதா ? என்றால் அதற்கும் இல்லை என்ற பதில்தான்.
சரி. அவரும் மறைந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்து ஜானகி அணி என்றும் ஜெயலலிதா அணி என்றும் இருகூறுகளாக பிளவு பட்டு பிறகு ஜானகி அணி சிதைந்து போய் அதன் பிறகு அது ஜெயால் கவர்ந்து இழுக்கப்பட்டு கபளீகரம்செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் இந்த ஜெ யால்பராமரிக்கப்பட்டு, அதன்பிறகு 1991-1996 என்று 5ஆண்டுகள் ஜெ ஆளுகைக்கு தமிழ்நாடு ஆட்பட்ட போது என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.
எல்லாமே பணம் பண்ணுகின்ற வேலைதான் அங்கே மறைந்த ஜெயால் நடத்தப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் மூல ஆதாரமே அந்தக் காலகட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை இந்த நாடே அறியும். அதன்
பிறகு ............
( தொடரும்)
பாகம் எண் :2. ( தொடர்ச்சி)
அதன் பிறகு 1996-2001 மீண்டும் இங்கே தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன.
அரசியலில் மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது பல
செய்கின்றதோ அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு
வராது. இதுதான் தமிழகத்தின் தலைஎழுத்து.
தி.மு.க. என்ன இதற்கு விதிவிலக்கா என்ன !!
2001-2006 நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் இங்கே மறைந்த ஜெயாவின் தலைமையில் ஆட்சி மாற்றம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அரங்கேற்றம் ஆனது. இதைத்தெரிந்தும்தெரியாதது போல ஜெயலலிதா மவுனம். எல்லாமே வசூல் வேட்டைதான். ஜெயலலிதாவிடம் பணம்
குவியத்தொடங்கிய காலம் அது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் சேரத்தொடங்கியது. பணம் மொய்த்ததோ !! மதம் பிடித்ததோ !! இது அந்தக்கால தமிழ் பழமொழி. யாரையும் எவரையும் தன்னிடம் இருக்கும் பணத்தில் விலைக்கு வாங்கிடலாம் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்ட காலமிது. சசிகலா
தனது உள்மனதில் தனக்கும் இதுபோல ஆளும் காலம் வந்துவிடாதா ? என்ற ஆசை முளைவிட்ட காலமும் இதுவே. ஆனால் இதற்கு இன்னும் பலகாலம் தான் பொறுத்து இருந்தே ஆக வேண்டும் என்று நினைத்தார் உயிர்த்தோழி சசிகலா. பகையாளியின் குடியை உறவாடிக் கெடுத்திடு !! இதுதான் சசிகலாவின் உள்மனதில் உருவான ஒரே கருத்தும் எண்ணமும். ஆனால் அதனை நிறைவேற்றிடஅவர் 2௦௦6 ஆண்டில் தாம் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருந்து அதனை தாமே நிறைவேற்றிட போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. அதுதான் இறைவனின் ஆணை. அது எப்படி நிறைவேறியது ?
அடுத்த தொடரில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம்.
அன்புடன். மதுரை. TR.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக