செவ்வாய், 6 டிசம்பர், 2016

சமரசம் உலாவும் இடம் எது ? கவிஞர் மருதகாசியின் படைப்பினில்.......இதோ...உங்களுக்காக....




சமரசம் உலாவும் இடம் எது ?


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை 
வணக்கங்கள்  உரித்தாகுக.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அது 1952ம் ஆண்டு. கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கருப்பு-வெள்ளை திரைக்காவியம்தான் 

                      ரம்பையின் காதல் 

இதில் மறைந்த குணச்சித்திர நடிகை பானுமதி,
சிரிப்பு நடிகர் KA.தங்கவேலு, வில்லன் நடிகர் 
MN நம்பியார், TS பாலையா,SA அசோகன் மற்றும்
MN இராஜம் ஆகியோர் நடித்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்களை மறைந்த கவிஞர்கள்குலத்திலகங்கள் A.மருதகாசி, தஞ்சை ராமதாஸ் இருவரும்இயற்றிட, வெற்றி 
இசைஇயக்குனர்TR.பாப்பாஇசையில்வெளிவந்த 
மாபெரும் வெற்றிக் காவியம்தான் அது.

அதில், வாழ்க்கையின் உண்மை நிலையை, மனித வாழ்வின் இறுதி வடிவத்தை, சுடுகாட்டு மயானத்தில் கதாநாயகன் சோகத்தோடு அமர்ந்திருக்க, ஒரு சிவனடியார்பாடுவது போன்ற காட்சி. இது மனித வாழ்வின் உண்மை வடிவத்தை புடம்போட்டு, தோல் 
உரித்துக்காட்டிடும் வகையில் பாடல் ஒன்று இடம் பெற்றது. கவிஞர் A.மருதகாசி இயற்றிய சிறப்புப் பாடல் அது. தற்போது உள்ள சூழலுக்கு இந்தப்பாடல் மிகமிகநன்றாகவேபொருந்துகிறது 

இப்போது நாம் பாடலைப் பார்ப்போமா நேயர்களே !!

https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4

மேல்குறித்த வலைதள முகவரியைத் தனியாக 
அச்சிட்டு க்ளிக் செய்தால், அந்தப்பாடலை நீங்கள் முழுவதுமாக ஒலி.ஒளிக்காட்சியில் கண்டு மகிழ்ந்திடலாம்.வெண்கலக்குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த சீர்காழி S. கோவிந்த ராஜனின் மறக்க  முடியாத காவியப்பாடல் அது.

பாடல் இதோ :-

சமரசம்...உலாவும்..இடமே.... !!
நம் வாழ்வில் காணா !!...
சமரசம்...உலாவும்..இடமே...!!

                                                               ( சமரசம்)

ஜாதியில் மேலோர் என்றும் !!
தாழ்ந்தவர் கீழோர் என்றும் !!
பேதமில்லாது..எல்லோரும் முடிவில் !! 
சேர்ந்திடும் காடு...தொல்லை இன்றியே !! 
தூங்கிடும் வீடு...உலகினிலே இதுதான் !!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் !!
இடமே !!...
                                                                             ( சமரசம்)

ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ?
அறிஞன் எங்கே ? அசடனும் எங்கே ?
ஆவிபோனபின் கூடுவார் இங்கே !!
ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !! ....

                                                                         ( சமரசம்)

சேவை செய்யும் தியாகி !!
ஸ்ருங்கார போகி !!
ஈசன் பொற்பாதம் தன்னை !!
நாடிடும் யோகி !! எல்லோரும் !! 
இங்கே ஒன்றாய்உறங்குவதாலே !!
உண்மையிலே இதுதான் நம் !!
வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !!

                                                                                     ( சமரசம்)


இன்றைய தினம் தமிழக முதல்வர் 
இறுதி சடங்கு நடைபெறுகின்ற இந்த 
நேரத்தில், இந்தப் பாடல் எனது நினைவலையில் எழுந்ததால், நான் இந்தப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

ஆழ்ந்த வருத்தத்துடன் !!

மதுரை. TR.பாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக