செவ்வாய், 29 டிசம்பர், 2015

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !! சங்கு சுட்டாலும் வெண்மை தரும் !!






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு  அலேக்கும்  !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 

என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் 

என் இனிய காலை வணக்கம்.


உலக தட்பவெப்ப நிலையை இங்கே தற்போது 

வெகுவாக பாதித்துக்கொண்டிருக்கும் எல்-

நினோ எனும் நிலையால் கடந்த நவம்பர் 

மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் 

மழை வானத்தைபொத்துக்கொண்டு கொட்டோ 

கொட்டென்று கொட்டித் தீர்த்த நிகழ்வுகள் 

உலகம் அறிந்ததே. 


ஆனால், இதே போல் ஒரு நிலை இங்கிலாந்து 

நாட்டில் சில பல இடங்களிலும் நடைபெற 

உள்ளது என்பதனை நாம் அப்போது 

அறிந்திருக்கவில்லை. லண்டன் மாநகரம் 

மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு 

நகரங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுஅதனால் 

அங்குள்ள தெருக்கள் மற்றும் வீடுகள் இவற்றின் 

உள்ளும் நீர் புகுந்து அங்கே வாழ்ந்திடும் மக்கள் 

பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளான 

சம்பவங்கள் நாம் தொலைக்காட்சியின் 

வாயிலாக தெரிந்து கொள்கின்றோம்.


ஆனாலும் நமது பல பிறவிகள் பெற்ற 

புண்ணியத்தின் பயனாக கடந்த 2011 ம் ஆண்டு 

இங்கே தமிழகத்தின் முதல்வராக பதவிப் 

பொறுப்புஏற்றுக்கொண்டபுண்ணியவதி அம்மை

யார் ஜெயலலிதாவைப்போல அல்லாமல், 

( அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிலே 

சென்று அங்கே கடும் துன்பத்திலும், 

துயரத்திலும் ஆழ்ந்திருக்கும் மக்களை கண்டு 

ஆறுதல்கூட சொல்லாமல் பதவி என்னும் 

நாற்காலியில் செருக்கோடும் ஆணவத்தோடும் 

அமர்ந்துள்ளஅம்மையார் ஜெயலலிதாவைப்

போல இன்றி ) அந்த நாட்டின் பிரதமர் திரு 

டேவிட் காமரூன் அவர்கள், மழைக்கால 

காலணியை அணிந்து கொண்டு அங்கு 

வாழ்கின்ற அனைத்து மக்களையும் 

நேரிலே சென்று சந்தித்து, அவர்தம்துயரங்களில் 

தாமும் பங்கு கொண்டு, அவர்களது கண்களில் 

கசிந்துகொண்டு இருக்கும் கண்ணீரைத் 

துடைக்கும் விதமாக பலகோடி ஸ்டெர்லிங்

பவுண்டுகளை ( அந்த நாட்டு நாணயம்) வெள்ள 

நிவாரணநிதியாக, உடனடியாக, பாதிக்கப்பட்ட 

மக்களுக்கு வழங்கி அத்துடன் நில்லாமல், 

அங்கே வெள்ளநிவாரணப் பணிகளில் 

தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு 

செயல் பட்டுவரும் பணியாளர்களைகைகுலுக்கி 

பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்தியும்சென்ற 

காட்சியினை நான் இங்கே தொலைக்காட்சியில் 

பார்க்கின்றபோது எனது கண்கள் குளமாகியதை 

நான் இங்கே அவசியம் குறிப்பிட்டே ஆக 

வேண்டும்.

இங்கிலாந்துநாட்டுமக்கள்செய்தபுண்ணியத்தில் 

நூறில் ஒரு பங்குகூட இங்கே நமது தாழ்ந்த 

தமிழகத்தில் வாழ்ந்து வரும் நாம் செய்திட 

வில்லையேஎன்பதனைஎண்ணிப் பார்க்கின்ற

போது நமக்கு வருவது என்னவோ வேதனை 

கலந்த பெருமூச்சும், வென்நீரைப்ப்போன்ற 

கண்ணீரும்தான்.

இதனால்தான்அக்காலத்தில்நம்முன்னோர்கள்

சொல்லிச்சென்ற ஒரு பழமொழியினை நான் 

இங்கே நினைவு படுத்தி அதையே இந்தக் 

கட்டுரையின் தலைப்பாக வடித்து அதனை 

உங்களிடம் பதிவு செய்வதில் எனக்கு மிக்க 

மகிழ்ச்சியே.

அந்தப் பழமொழி இதோ, மீண்டும் உங்கள் 

கவனத்திற்கு :-

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!-சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் !!
நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.

செவ்வாய், 24 நவம்பர், 2015

மரணம் !! இதைப்பற்றிய ஒரு சிந்தனை !!








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


                               ம   ர   ண   ம் !!

எனது இல்லத்தரசியின் மூத்த உடன்பிறப்பின் 

மகள் லட்சுமி நேற்று ( 23-11-2015) பகல் 12 

மணியளவில் இயற்கை எய்தினார். எனக்கு 

அவள் மகள் முறை.

என்னை அழகு தமிழில் சித்தப்பா என்று 

அழைப்பது அவள் வழக்கம். 


அவளது மரணம், மனதளவில் எனக்கு 

ஒரு பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது. அதன் 

எதிரொலியே இந்தக் கட்டுரை. என் சோகத்தை 

உங்களிடம் நான் சிறிதுநேரம் பகிர்ந்துகொள்ள 

என்னை அனுமதியுங்கள்.

நன்றி !! வணக்கம் !!

        

                                மரணம் !!


மரணம்தான் எத்தகைய மகத்துவத்தை 

தன்னுள் சுமந்துகொண்டு இருக்கிறது !!


அதிலும், குறிப்பாகச்சொல்லவேண்டுமென்றால் 

நெருங்கிய உறவினர்களிடையே நிகழும் 

மரணம்,நம் உள்ளம் என்னும் ஆடையில் 

இதுவரையிலும் படிந்திருக்கும் அழுக்குகளை, 

சோகம் என்னும் சவக்காரம் கொண்டு சலவை 

செய்து கண்ணீர் எனும் தண்ணீர் கொண்டு 

அலசி, பிழிந்து  சுத்தம் செய்வதில்தான் மனம் 

எவ்வளவு லேசாகிறது !!


ஒவ்வொருஉறவினராகவந்துஇறந்தவரது

உடலைப் பார்த்திட வரும்போதெல்லாம் அங்கே 

எழுகின்றஒட்டுமொத்தஅழுகைஒலி,அதிகாலை 
நேரத்து உலகை எழுப்பிடும் புள்ளினங்களின் 

தரும் ஓசையைக்கூடவாயடைத்திடச்செய்கிறது.

இறந்தஉடலைத்தூக்கிக்கொண்டு,மயானக்கரை 

புறப்படுகின்றவரையிலும்,அந்தவீட்டில் 

இதேநிலைதான் நீடிக்கிறது.


இன்றிறந்த பிணத்தைச் சுற்றி !!

இனிச்சாகும் பிணங்கள் அழுதனவாம் !!

என்னும் பட்டினத்தாரின் கூற்றுப்படிதான்இங்கே 

எல்லா மரணங்களும் நிகழ்கின்றன.


இறந்தாரை என்றும் 

மறந்தாரில்லை !!


இதுகிறித்துவமதத்தாரின்கல்லறைத்தோட்டத்து

வாசகம். இதன் அடுத்த வரிதான் என்னை 

மேலும் சிந்திக்க வைத்திட்ட வரிகள்.


இன்று உனக்கு !! நாளை எனக்கு !!


உலகினில் இறைவன் படைக்கின்ற 

எல்லா உயிரினங்களும் என்றாவது ஓர் நாள் 

மரித்துத்தான் போகின்றது.


ஆனால்மனிதராகபிறந்தஅந்தமகோன்னத 

பிறவியில் மட்டுமே, மனிதத்தன்மையோடு

வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனைபேர் என்று 

கணக்கெடுத்துப்பார்த்தால் வருகின்ற விடை   

என்னவோ 1௦௦ க்கு ஒற்றை இலக்கினில்தான்.


அன்போடு வாழ்ந்து, அறிவு கொண்டு 

சுற்றங்களையும் நட்பினங்களையும், 

அரவணைத்து வாழ்ந்து தெய்வங்களென 

மறைந்த சுற்றத்தார்களை நான் இந்தத் 

தருணத்தில் எண்ணி, விழிகளில் வழிந்து 

ஓடிடும் கண்ணீரை துடைத்தபடியே கைகூப்பி 

வணங்கி விடைபெறுகிறேன்.



திருமலை.இரா.பாலு.




ஞாயிறு, 8 நவம்பர், 2015

http://strictlyadultsonly.blogspot.in/2015/11/blog-post_9.html ஏன்தான் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுதோ ?




பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய எல்லாம் வல்ல 


அல்லாஹ் வின் திருப்பெயரால் இங்கே 


எழுதிடத் துவங்குகின்றேன்.


மழைக்காக உலகிலே எந்தக் கவிஞனும் 

செய்திடாத ஒரு மாபெரும் சிறப்பினை அந்த 

மழைக்கு அளித்து அதற்காக 

                              வான் சிறப்பு !!
என்று பெயரில் தனி ஒரு அதிகாரத்தை எடுத்து 

அதில் பத்து குறளை எழுதி மழைக்குப்பெருமை 

சேர்த்திட்ட புலவன் இப்பூவுலகினில் 

திருவள்ளுவரைத்தவிர வேறு யார் இருந்திட 

முடியும் ?


திரை உலகினைப் பொறுத்தவரை இந்த மழை 

என்பது அங்கே காதலனும், காதலியும் 

நனைந்துகொண்டே ஆடியும் பின்னர் 

பாடியும் அந்தக் காம உணர்வினை 

வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே 

அமைந்திட்டாலும் கூட, அந்த சூழ்நிலையை 

பாட்டுக்கோர் தலைவன் பட்டுக்கோட்டை 

கல்யாணசுந்தரம், ஏழை அழுகின்ற 

கண்ணீருக்கு இணைசெய்து எழுதிய பெருமை 

அவரைத்தவிர வேறு எந்தக் கவிஞனுக்கும் 

இல்லை என்பதனை நான் இங்கே 

மெத்த பணிவன்புடன் கோடிட்டுக்காட்டிட 

பதிவு செய்திடக் கடமைபட்டுள்ளேன்.



சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே !!

மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு 

அங்கே !!

கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றிவியர்வை 

போலே !! 

அவன் கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீர்த்துளி 

போலே !!


என்று பாடி மழைத்துளியை ஏழை விடுகின்ற 

கண்ணீர்த்துளிக்கு இணைவைத்துப் பாடிய ஒரே 

ஒப்பற்றகவிஞன்நமது பட்டுக்கோட்டைதான். 


திருவள்ளுவர் மழைக்காக எழுதிய பத்து 

குறள்களில் எனக்கு மிகவும் பிடித்த குறள் 

இதுதான்.


அதிகாரம்  :-  வான் சிறப்பு.

குறள் எண் :-  15.


கெடுப்பதூஉங்கெட்டார்க்குச்சார்வைமற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை... ... ...


விளக்கம் :-  மழை பெய்யாமல் உழவர்களை 

அழிப்பதும்பின்னர் நின்று பெய்து உழவர்களை 

வாழ வைப்பதும் அந்த மழையே ஆகும். 

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 

சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.

வியாழன், 5 நவம்பர், 2015

உண்மையான தீபாவளியே நமக்கு அப்போதுதான் !! சோட்டா ( சிறிய)ராஜனைப் பிடிச்சாச்சு !! படா ( பெரிய) இராணியைப் பிடிப்பது எப்போது ?







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



உலகம் முழுவதும் அன்புடனும் நல்ல தூய 

தமிழ்ப் பண்புடனும் வாழ்ந்து வருகின்ற என் 

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் இந்த இனிய காலை

வேளையில் எனது உள்ளங்கவர்ந்த, அன்பு 

நிறைந்த, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க 

கடமைப்பட்டுள்ளேன். நிற்க !!


இன்றையதினம் இந்தோனேசியாவில் உள்ள 

பாலித்தீவிற்கு பாலியல் சுகம் காண வந்திருந்த 

சோட்டா இராஜன் அங்கே இன்டர்போல் என்னும் 

தர்ம தேவதையின் பிடியில்சிக்கிசின்னாபின்னம் 

ஆகி ( இந்திய நாணய மதிப்பில் 5,௦௦௦ கோடிக்கு 

மேலாக ஆஸ்தி பாஸ்திகளைத் தன்னகத்தே 

கொண்ட ( இதுதவிர சிங்கப்பூரில் ஏகப்பட்டதங்க 

நகைக்கடைகள் வேறு ) அந்தப் பெருமகனார், 

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். 

இறுதியில் தர்மமே வெல்லும் எனும் 

தாரகத் திருமந்திரத்தின் அடிப்படையில் 

கைகளில் விலங்கிடப்பட்டுஇன்றோ,நாளையோ 

அல்லது இன்னும் சில  தினங்களிலோ இந்தியா 

அழைத்துவரப்படப் போகிறார் என்கின்ற 

நெஞ்சம் இனித்திடும் சேதி கேட்டுத் துள்ளித் 

திரிகின்ற நம்முடைய அதே நெஞ்சம் கேட்கின்ற 

கேள்விதான் இன்றையதினம் இங்கே 

கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு 

உள்ளது என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


ஆம். உண்மைதான். இன்று சோட்டா இராஜன் 

பிடிபட்டுவிட்டார். அனால் இந்தத் தமிழகம் 

அதில் வாழும் அத்தனை மக்களாலும் இதய 

வெறி கொண்டு அழைக்கப்படும் படா இராணி 

அம்மையார் அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் ?

என்பது ஒன்றே நமது இதயங்களைத் துளைத்து 

கொண்டிருக்கும் ஒரே கேள்வி. மதிப்பிற்குரிய 

எனது அன்புத் தந்தைஅடிக்கடிஒருவிஷயத்தைப் 

பற்றிச்சொல்லிக்கொண்டே இருப்பார்கள் :-


சிலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்.

பலரைப் பலகாலம் ஏமாற்றலாம்.

                          ஆனால் 

எல்லோரையும் எப்போதும் 

ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.


என்று. அதுபோல விரைவில் அவரும் பிடிபட்டு 

சிறைச்சாலையின் கம்பிகளை எண்ணப்போகும் 

நாள் வெகு தொலைவினில்இல்லை.அன்றுதான் 

நம்மில் அனைவருக்கும் உண்மையானதீபாவளி 

என்று சொல்லி உங்கள் அனைவரிடமும் அன்பு 

வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.


நன்றி!! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

இறைவன் சிவபெருமான் எவ்வழியோ இயக்குனர் திரு.பாரதிராஜா அவ்வழியே !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!                                                                                   
உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற எனது
அன்பிற்கும் பாசத்திற்கும்உரிய
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!                                                                                                  

உங்கள் அனைவருக்கும் எனது இதயம்                                                                            
கனிந்த காலை வணக்கங்கள்.

இன்றையதினம் நான் எனது நெஞ்சிற்குள்ளாக

புதைந்து கிடக்கின்ற புகைந்துகொண்டிருகின்ற

ஒரு கருத்தினை சற்று விலாவாரியாக உங்கள்

அனைவரிடமும் மனம்விட்டு உரையாடலாம்

என்னும் எண்ணத்துடன் இந்த வலைதளத்தின்

மூலமாகஉங்களுடன்உரையாற்றிக்கொண்டு 

உள்ளேன். நிற்க !!


இரண்டு தினங்களுக்கு முன்பாக  

(முன்னாள் மதுரை மாவட்டத்திற்கு உள்ளாக 

அமைந்த) தேனி மாவட்டத்தில் 

                            " அவதரித்த "

எங்கள் இதயம்கனிந்த அன்பு இயக்குனர் 

திரு.பாரதிராஜா அவர்கள்

தனது திருவாய் மலர்ந்து கருத்து ஒன்றினை 

பத்திரிகைகள்வாயிலாக வெளியிட்டுள்ளதைப் 

பற்றித்தான் எனதுகருத்து விமர்சனமும் அமைய 

உள்ளது நேயர்களே.


நாளையதினம் ( 18-10-2015) ஞாயிற்றுக்கிழமை 

நடைபெறஇருக்கின்ற தென்னிந்திய நாடகநடிகர் 

சங்கத்தின்தேர்தலில், ஆளுகைக் குழுவிற்கு 

(Executive Committee)தமிழர்களை மட்டும் 

தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற

கருத்தினை மிக ஆணித்தரமான முறையில் 

அவர்வெளியிட்டுள்ள விதத்தினை 

பார்த்திடும்போதுஎன்னால் என்னுள் 

வெளிவரும் விலாநோகும்சிரிப்பினை அடக்கிட 

இயலாதவனாக உங்கள்அனைவரின் முன்பாக 

இந்தக் கட்டுரையை நான்வரைந்து கொண்டு 

இருக்கிறேன்.


இன்று திரு பாரதிராஜா, அவர் சார்ந்திருக்கின்ற

குலத்திற்குத் தலைவியாகவும், ஆளும் மாநிலத்

தலைமையின் நெருங்கிய ஆருயிர்த் 

தோழியாகவும்இருக்கின்ற அந்த சின்ன 

அம்மையாரைத் திருப்திசெய்திடுவதற்காகவோ 

அல்லது அவர்களிடமிருந்துவந்திருக்கும் 

உத்தரவிற்கு அடிபணிந்து இந்தபத்திரிகை 

செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்படி 

ஒருவேண்டுகோள்தனை தனது நீண்ட நெடுநாள் 

ஆசையெனஅறிவித்திருக்கிராரோ ?

யான் அறிந்திலேன் பராபரமே.


ஆனால் இந்த இடத்தில் நான் ஒரு கருத்தினை 

மிகமிகத்தெளிவாகக்குறிப்பிட்டேஆகவேண்டும். 

அது என்னஎன்றால் புராண காலம்தொட்டு 

நடைபெற்றுவருகின்றகலி காலம் வரை, 

(எனக்கு நினைவு தெரிந்த வரை) 

யார்யாரெல்லாம்தோல்வியின் விளிம்பில் 

நின்றுகொண்டு வீழ்வது இப்போதோ

இல்லை அப்புறமோ என்று பரிதவித்துக் 

கொண்டிருகிறார்களோ அவர்கள் 

அனைவரும் இறுதியாக தங்களது கரங்களில் 

எடுத்துக்கொண்டுதாங்கள் வெற்றிபெற்று 

விடலாம் எனும் நப்பாசையில்

வீசுகின்ற அணுகுண்டுதான் இந்த சாதி,மத,இன 

பிரிவுகளைகுறிப்பிட்டு அறிக்கைகளை 

வீசுபவர்களாகத்தான் நான்

இதுவரையிலும் கண்டிருக்கிறேன்.


இறைவன் சிவபெருமான் முதல் இயக்குனர் 

பாரதிராஜாவரைஇதே வழியில்தான் 

பயணித்தார்கள், பயணித்துக்கொண்டு

இருக்கிறார்கள் என்பதே எனது ஆராய்ச்சியில் 

கண்டுகொண்டஒரு முடிவு.


இறைவன் சிவபெருமான் திருவிளையாடல்கள் 

மொத்தம்அறுபத்தி நான்கு. அவைகளுள் 

தருமிக்கு பொற்கிழி வழங்கியலீலை என்றும் 

ஒன்று வரும். அதில் பாண்டிய மன்னனுக்கு

ஏற்பட்ட சந்தேகம் " பெண்களின் கூந்தலுக்கு 

இயற்கையிலேமணம் உள்ளதா அல்லவா " 

என்பது.

( அந்தக்காலத்திலேவாழ்ந்த மன்னர்கள், 

மக்களுக்கு எவ்வாறெல்லாம் பணிசெய்து

பொதுப்பணியாற்றி இருந்தார்கள் என்பதற்கு 

இந்த லீலை ஒன்றேபோதுமானது) 


அப்போது தருமிக்கு உதவிசெய்திடும் வண்ணம்

இறைவனே ( தவறான பொருள் நிறைந்த )பாடல் 

ஒன்றினைஇயற்றி அதை தருமிக்கு வழங்கிட, 

தருமியும் அதனை எடுத்துக்கொண்டு தமிழ்ச் 

சங்கம் சென்று அதன் தலைவரான பாண்டிய

மன்னனிடம் வழங்குகிறான்.பாடலின் 

உட்பொருளில் உள்ள பிழைஅறிந்திடாமல் 

பாண்டிய மன்னன் பரிசுத்தொகையாக 

பொற்காசுகள்வழங்கிட முற்படும்போது 

தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவர்

நக்கீரர் அதனைத் தடுத்து, அர்த்தத்தினை 

விளக்கிக் கூறி விட்டுஅதன்பின்னர் பரிசுத் 

தொகைதனை பெற்றுச்செல்லும்படி அவர்

தருமியிடம் கூற, செய்வது அறியாது தருமி 

சபைதனை விட்டுவெளியேறி சிவபெருமானிடம் 

நடந்தவற்றினைக் கூறிட,உடனேசினம்கொண்ட 

சிவபெருமான், தமிழ்ச்சங்கத்திற்கு வந்து 

தருமிக்குபொற்காசுகளைத் தர மறுத்ததற்கான 

காரணத்தினைக்கேட்டுதர்க்கம் செய்திட 

முற்படும்போது, அந்தப்பாட்டினில் பிழை நிறைய

உள்ளது என்று தலைமைப் புலவர் நக்கீரர் 

எடுத்து உரைக்க, சிவன்எங்கே, எந்த இடத்தில் 

பிழை என்று கேட்க, அதனை நக்கீரர் எடுத்து

உரைக்க, இறுதியில் உண்மைதான் அந்தப் பிழை 

என்பதனைஅறிந்துகொண்ட சிவபெருமான், 

நக்கீரரிடம், தனது நெற்றிக்கண்ணைக்காட்டி,


நக்கீரா !! நன்றாக என்னைப்பார் !! 

நான் எழுதிய பாடல் குற்றமா ?          

என்று கேட்க, நீரே முக்கண் முதல்வராகவும் 

ஆகுக !! உமது நெற்றிக்

கண்ணைக் காட்டியபோதிலும், உமது 

உடம்பெல்லாம் கண்ணாக்கிச்சுட்ட போதிலும்,
                                       

            " குற்றம் குற்றமே "

என்று ஆணித்தரமாக எடுத்துரைத்திட்ட போது, 

சிவன் அங்கே தனதுகைகளில்எடுத்துக்கொண்ட 

அதே ஆயுதத்தைத்தான் தற்போது நமது

இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களும் தனது 

கைகளில் எடுத்துக்கொண்டு நடப்பு தலைவர் 

திரு. சரத்குமார் அவர்களைக் காப்பாற்றும்

முயற்சியில் இறங்கியுள்ளார். 


அதுதான் சாதியை சீண்டிப் பார்ப்பது.

இறைவன் சிவன் கூறுகிறார் தனது பாடலில்  :-


அங்கம் புழுதிபட, அறவாழி நெய் பூசி,

தங்கக்கடல் மணலில் கால் பரப்பி

சங்கதனைக் கீர் கீரென அறுக்கும்

நக்கீரரோ எம்கவியை ஆராயத்தக்கவர் ?


பொருள் :-  கடற்கரைமணலில் கால்களை

பரப்பி விரித்துக்கொண்டு சங்குகளை அறுத்து

எடுத்து பிழைப்பு நடத்துகின்ற நக்கீரரோ எனது

பாடலை ஆராயத்தக்க தகுதியைப் படைத்தவர் ?


இப்போது நக்கீரர் தனது பாடலில் :-


சங்கறுப்பது எங்கள்குலம் !!

சங்கரனார்க்கு ஏதுகுலம் !!

சங்கை அறிந்துண்டு வாழ்வோம் !!

அறமே!!உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை !!


பொருள் :-  சங்கினை அறுத்து அதனை எடுத்து 

விற்றுபிழைப்பு செய்து வாழ்கின்றோம் நாங்கள்.

இறைவனே !!உன்னைப் போல நாங்கள் 

(இரந்துண்டு )பிச்சை எடுத்து உண்டு 

வாழ்வதில்லை.


எப்படி பார்த்தீர்களா நேயர்களே !!

தனது கட்சி தோற்றுவிடும் என்கின்ற நிலை 

வந்தவுடன்புராணகால சிவபெருமானில்இருந்து 

கலிகாலஇயக்குனர் பாரதிராஜா வரையிலும் 

சாதி,இன,மதவேற்றுமைகளை தூண்டிவிட்டுப் 

பார்க்கிறார்கள்.


இதனை நாடும் , நாட்டு மக்களும் உற்றுப்

பார்த்திட வேண்டும் என்ற எனது தணியாத 

ஆசையின்விளைவு, இந்தக் கட்டுரை. 

பொறுமைகாத்து படித்து எனக்கு பெருமை 

சேர்த்திட்ட அன்பு ரசிகப் பெருமக்கள்

அனைவருக்கும் எனது  இதயம் கனிந்த 

நன்றியும் அதனைத்தொடர்ந்து வணக்கமும் 

உரித்தாகட்டும்.



அன்பன். திருமலை.இரா. பாலு.
























































































































































































































                                                                               

















திங்கள், 28 செப்டம்பர், 2015

இன்று ( 29-09-2015) உலக இதய நாள் -- நமது விலைமதிப்புள்ள இதயத்தினை ஆயுட்காலம் வரையிலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில யோசனைகளும் குறிப்புக்களும் !!







பிஸ்மில்லா-ஹிர்ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும்,


அன்பார்ந்த வணக்கம். இன்றையதினம் 

உலக இதய நாள் என்று அனைவராலும் 

மதிக்கப்படுகின்றது. இந்த நன்னாளில் 

நான் உங்கள் அனைவரையும் வேண்டிக் 

கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் அனைவரும் 

அவரவரது இதயங்களை மிகவும் பாதுகாப்பாக 

வைத்துக்கொள்ளுங்கள் என்பது மட்டுமே.  

நான் இதை ஏன், எதற்காக இவ்வளவுதூரம் 

முக்கியத்துவம் கொடுத்து உங்களிடம் 

விளக்கிக் கூறுகிறேன் என்று கேட்டால், 

நமது இதயம் தான் உச்சந்தலை 

முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள எல்லா 

இடங்களுக்கும் இரத்தத்தினை நாடி நரம்புகள் 

மூலமாக (தான் இயங்குவதன் மூலமாக) நல்ல 

அழுத்தம் கொடுத்து பரவிட ஆவன செய்திடும் 

ஒரே இயந்திரம் என்பதனை நாம் அனைவரும் 

முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும்.  

எனவே இந்த முக்கியமான பணியினைச் 

செய்திடும் இந்த இயந்திரம் இயங்குவதற்கு 

நாம் எந்தவிதமான இடையூறும் செய்திடாமல் 

இருக்க நம்மை நாம் முதலில் பழகிக் கொள்ள 

வேண்டும். அதற்கான வழிமுறைகள்:-


1)  கொழுப்புச்சத்து மிக அதிகம் உள்ள மாமிச 

உணவு வகைகள், முட்டை, வெண்ணை, நெய் 

போன்ற பொருட்களை நமது தினசரிஉணவினில் 

சேர்க்காமல் உட்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.


2)  போதை தரும் ஆல்க்கஹால் மற்றும் புகை 

பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதை  இனிமேல் 

தொடரப் போவதில்லை என்று நாம் 

அனைவரும் சூளுரைத்தல் மிக மிக அவசியம்.


3)  எவ்வளவுதான் கழுத்தினை நெறித்திடும் 

பிரச்சினைகள் வந்தாலும் அவைகளை நாம் 

சட்டை செய்யாமல் மன அழுத்தத்திற்கு இடம் 

தராமல், இன்முகத்துடன் நேர்கொள்ளும் மனத் 

திறனை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

படைத்தவன் இருக்கிறான் அவன் 

பார்த்துக்கொள்வான், என்று இறைவன்மேல் 

பாரத்தினைப் போட்டுவிட்டு நாம் மன 

மகிழ்ச்சியுடன் வாழ்தல் மிகவும் அவசியம்.



எனவே அன்பு நேயர்களே !!


இதயத்தினை பாதுகாத்துக்கொள்ள நான் 

உங்கள் அனைவருக்கும் மேலேசொன்ன 

அனைத்து விஷயங்களையும் தாங்கள் இன்று 

முதலாவது வாழ்வினில் கடைப்பிடித்து 

வாழ்ந்திடவேண்டும் என்று கேட்டுக் 

கொள்கிறேன். 

இன்று சன் தொலைக்காட்சியில் 

" விருந்தினர் பக்கம் " 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இதய 

மருத்துவ நிபுணர் திரு சொக்கலிங்கம் அவர்கள் 

கூறியதுபோல,


கடந்த காலம் என்பது உடைந்துபோன பானை !!

எதிர்காலம் என்பது மதில் மேல் உள்ள பூனை !!

நிகழ்காலம் மட்டுமே  கையில் உள்ள வீணை !!


என்பதை மனதில் நிலை நிறுத்தும் விதமாக, 

மாமிச உணவினையும், மது மற்றும் 

புகைபிடிக்கும் பழக்கம் இவைகளை அறவே 

நிறுத்தி இதயத்தினை நாம் அனைவரும் 

பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் 

என்று உறுதி ஏற்று சபதம் கடைபிடிப்போம் !!


நன்றி !!   வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா.பாலு.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

மனித மனம் ஒரு வெங்காயம் !!





astrobalu1954@gmail.com




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 


அனைவருக்கும் இனிமைகள் நிறைந்த 

காலை வணக்கங்கள்.


இன்றுமுதல் நான் ஒரு புதிய வலைத்தளம் 

மூலமாக உங்கள் அனைவரையும் நான் 

          " மனதில் மறைந்தவை " 


என்ற பெயரில் எழுத ஆரம்பித்துள்ளேன்.


       மனித மனம் ஒரு வெங்காயம் !!



இறைவனால் இப்புவியில் படைக்கப்பட்ட 

இனங்களுள் மிகவும் உயர்வான ஆறறிவு 

உள்ள ஒரே இனம்தான் மனித இனம்.அந்த 

மனித மனத்தின் மனம் ( மூளை) என்பது 

இன்றுவரை ஒரு புரியாத புதிராகவேதான் 

உள்ளது என்பது ஆன்றோரும் அறிவில் சிறந்த 

சான்றோர்களும் ஒப்புக்கொண்டுள்ள ஒரு 

மறைக்க முடியாத, மறுக்க முடியாதஉண்மையே 

ஆகும்.

எப்படி வெங்காயத்தை உரிக்க உரிக்க அதனுள் 

எதுவுமே இருக்காதோ, அது போலவே பல்வேறு 

நினைவுகளால் நிறைந்துள்ள மனித மனமும் 

திறக்க திறக்க, எதுவுமே இல்லாத ஒரு காலி 

இடமாகவே காணப்படுவதுதான் நமது மனித 

இனத்தின் சிறப்பு. 

(எத்தனை கணிப்பொறிகள் வந்தாலும் அந்த 


இயந்திரம் என்பது மனிதனின் மூளைக்கு 


இணையாகவும் ஆகாது அதுபோல ஈடாகவும் 


ஈடாகாது என்பதுதான் உண்மை.)



இத்தனை சிறப்புகளைத் தன்னகத்தே 


கொண்டுள்ள மனித மூளையை ( மனத்தை) யார் 


ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள்ளாக அடக்கி 


வைத்துள்ளாரோ, அவரே எல்லோரிலும் 


சிறந்தவர். 


மனிதனின் தினசரி பழக்க வழக்கங்களை தனது 


கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள மனித 


மூளையை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் 

கொள்வது என்பது மிக மிகக் கடினம்.

அதனைச் செய்து முடிப்பவரே மனிதர்கள் 


எல்லோரும் போற்றிடும் உத்தமர் ஆவார்.

அவரை வாழ்த்தி இந்த முதல் கட்டுரையை நான் 


இங்கே நிறைவு செய்கிறேன்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன்.


திருமலை. இரா. பாலு.