வியாழன், 29 டிசம்பர், 2016

சிரிப்புத்தான் வருகுதையா !! அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர் தேர்வு பார்க்கின்றபோது !!பாகம் எண்.2. ( தொடர்ச்சி)!!




சிரிப்புத்தான் வருகுதையா !!
அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர் 
தேர்வு பார்க்கின்ற போது !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

ஒருவழியாக நேற்றையதினம் சென்னையில் 
கூடிய ஆளும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் 
தங்கள் கட்சிக்கு மறைந்த ஜெயலலிதாவிற்கு 
பிறகு ஒரு புதியதோர் பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். 

அது அவர்களது கட்சியின் உள்விவகாரம் என்பது உண்மை !! மறுக்க முடியாத உண்மை !! என்று சொன்னாலும் அதில் அந்தக்கட்சியின்அடிமட்டத் தொண்டர்களது ஆழமான மனதில் இருக்கும் உண்மையான, விசுவாசமான கருத்துக்களுக்கு, அவர்களின் சுதந்திரமான எண்ணங்களுக்கு உரிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுஇருக்கிறாரா? என்ற கேள்விக்கு ஒரு தமிழக அரசியல் ஆர்வலர் என்கின்ற முறையில் என்னால் 
இல்லை !! என்கின்ற பதிலைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

ஏனென்று கேட்டால், அந்தக் கட்சி, அதை ஒரு சராசரி தகுதி வாய்ந்த அரசியல் கட்சி என்று அழைக்கவே என் மனம் மறுக்கின்றது இது முதல் விஷயம்.

இரண்டாவது, தான் ( மறைந்த MGR ) ஜப்பான் நாட்டில் உலகம் சுற்றிய வாலிபன் படம் எடுத்தபோது  அங்கே அவர் அந்நியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டு, அதனை அதன் புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்து மறைந்த 
இந்திராகாந்தியிடம் தெரிவித்து, அதைவைத்து திமுக வை பலவீனப்படுத்த வேண்டும் அதை உடைக்க வேண்டும், தனக்கு ஜால்ரா அடிக்க தமிழகத்தில் ஒரு இயக்கம் வேண்டும் என்று ஒரே எண்ணத்தில்,துரோகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சிதான் மறைந்த MGR தொடங்கியஅஇஅதிமுகஎன்பதுநம்மில் இக்கால இளைஞர்கள் பலர் தெரிந்திருக்க வாய்ப்பு 
இல்லை என்பதால் அதனை மீண்டும் இங்கே நான் திவு செய்கிறேன். 

அப்படி துரோகத்தால் உருவாகிய கட்சி 1976 தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் 
அதாவது 1989 வரை இங்கே ஆட்சி செய்து சாதித்தது என்ன என்று கேட்டால், ஒரு மண்ணும் இல்லை, புரட்டுத்தலைவரின் அடிவருடிகள் ஏராளமான நபர்களுக்கு அரசின்புறம்போக்கு நிலங்களை பட்டா நிலங்கள் என்று பெயர் மாற்றி அதனை அந்த அடிவருடிகளுக்கு 
( மறைந்த ஜேப்பியார்,ஐசரிவேலன்,ACசண்முகம் 
இதுபோன்ற இன்னும் ஏராளமான பலர்) தாரை வார்த்துக்கொடுத்து அவர்கள் அந்த நிலங்களில் இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கி மக்கள் பணத்தை கல்வியின் பெயரால் சுரண்டி அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதைத்தவிர வேறு எந்த நலத்திட்டங்களும் இந்த MGRஇன் 13 ஆண்டுகால 
ஆட்சியில் இந்தத்தமிழகம் கண்டுள்ளதா ? என்றால் அதற்கும் இல்லை என்ற பதில்தான். 

சரி. அவரும் மறைந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்து ஜானகி அணி என்றும் ஜெயலலிதா அணி என்றும் இருகூறுகளாக பிளவு பட்டு பிறகு ஜானகி அணி சிதைந்து போய் அதன் பிறகு அது ஜெயால் கவர்ந்து இழுக்கப்பட்டு கபளீகரம்செய்யப்பட்டு  இரண்டு ஆண்டுகள் இந்த ஜெ யால்பராமரிக்கப்பட்டு, அதன்பிறகு 1991-1996 என்று 5ஆண்டுகள் ஜெ ஆளுகைக்கு தமிழ்நாடு ஆட்பட்ட போது என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.

எல்லாமே பணம் பண்ணுகின்ற வேலைதான் அங்கே மறைந்த ஜெயால் நடத்தப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் மூல ஆதாரமே அந்தக் காலகட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை இந்த நாடே அறியும். அதன் 
பிறகு ............

( தொடரும்)


பாகம் எண் :2. ( தொடர்ச்சி)


அதன் பிறகு 1996-2001 மீண்டும் இங்கே தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன.

அரசியலில் மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது பல 
செய்கின்றதோ அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு 
வராது. இதுதான் தமிழகத்தின் தலைஎழுத்து.
தி.மு.க. என்ன இதற்கு விதிவிலக்கா என்ன !!

2001-2006 நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் இங்கே மறைந்த ஜெயாவின் தலைமையில் ஆட்சி மாற்றம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அரங்கேற்றம் ஆனது. இதைத்தெரிந்தும்தெரியாதது போல ஜெயலலிதா மவுனம். எல்லாமே வசூல் வேட்டைதான். ஜெயலலிதாவிடம் பணம் 
குவியத்தொடங்கிய காலம் அது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் சேரத்தொடங்கியது. பணம் மொய்த்ததோ !! மதம் பிடித்ததோ !! இது அந்தக்கால தமிழ் பழமொழி. யாரையும் எவரையும் தன்னிடம் இருக்கும் பணத்தில் விலைக்கு வாங்கிடலாம் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்ட காலமிது. சசிகலா 
தனது உள்மனதில் தனக்கும் இதுபோல ஆளும் காலம் வந்துவிடாதா ? என்ற ஆசை முளைவிட்ட காலமும் இதுவே. ஆனால் இதற்கு இன்னும் பலகாலம் தான் பொறுத்து இருந்தே ஆக வேண்டும் என்று நினைத்தார் உயிர்த்தோழி சசிகலா. பகையாளியின் குடியை உறவாடிக் கெடுத்திடு !! இதுதான் சசிகலாவின் உள்மனதில் உருவான ஒரே கருத்தும் எண்ணமும். ஆனால் அதனை நிறைவேற்றிடஅவர் 2௦௦6 ஆண்டில் தாம் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருந்து அதனை தாமே நிறைவேற்றிட போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. அதுதான் இறைவனின் ஆணை. அது எப்படி நிறைவேறியது ? 

அடுத்த தொடரில் சந்திப்போம்.

நன்றி. வணக்கம். 

அன்புடன். மதுரை. TR.பாலு.

செவ்வாய், 6 டிசம்பர், 2016

சமரசம் உலாவும் இடம் எது ? கவிஞர் மருதகாசியின் படைப்பினில்.......இதோ...உங்களுக்காக....




சமரசம் உலாவும் இடம் எது ?


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை 
வணக்கங்கள்  உரித்தாகுக.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அது 1952ம் ஆண்டு. கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கருப்பு-வெள்ளை திரைக்காவியம்தான் 

                      ரம்பையின் காதல் 

இதில் மறைந்த குணச்சித்திர நடிகை பானுமதி,
சிரிப்பு நடிகர் KA.தங்கவேலு, வில்லன் நடிகர் 
MN நம்பியார், TS பாலையா,SA அசோகன் மற்றும்
MN இராஜம் ஆகியோர் நடித்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்களை மறைந்த கவிஞர்கள்குலத்திலகங்கள் A.மருதகாசி, தஞ்சை ராமதாஸ் இருவரும்இயற்றிட, வெற்றி 
இசைஇயக்குனர்TR.பாப்பாஇசையில்வெளிவந்த 
மாபெரும் வெற்றிக் காவியம்தான் அது.

அதில், வாழ்க்கையின் உண்மை நிலையை, மனித வாழ்வின் இறுதி வடிவத்தை, சுடுகாட்டு மயானத்தில் கதாநாயகன் சோகத்தோடு அமர்ந்திருக்க, ஒரு சிவனடியார்பாடுவது போன்ற காட்சி. இது மனித வாழ்வின் உண்மை வடிவத்தை புடம்போட்டு, தோல் 
உரித்துக்காட்டிடும் வகையில் பாடல் ஒன்று இடம் பெற்றது. கவிஞர் A.மருதகாசி இயற்றிய சிறப்புப் பாடல் அது. தற்போது உள்ள சூழலுக்கு இந்தப்பாடல் மிகமிகநன்றாகவேபொருந்துகிறது 

இப்போது நாம் பாடலைப் பார்ப்போமா நேயர்களே !!

https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4

மேல்குறித்த வலைதள முகவரியைத் தனியாக 
அச்சிட்டு க்ளிக் செய்தால், அந்தப்பாடலை நீங்கள் முழுவதுமாக ஒலி.ஒளிக்காட்சியில் கண்டு மகிழ்ந்திடலாம்.வெண்கலக்குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த சீர்காழி S. கோவிந்த ராஜனின் மறக்க  முடியாத காவியப்பாடல் அது.

பாடல் இதோ :-

சமரசம்...உலாவும்..இடமே.... !!
நம் வாழ்வில் காணா !!...
சமரசம்...உலாவும்..இடமே...!!

                                                               ( சமரசம்)

ஜாதியில் மேலோர் என்றும் !!
தாழ்ந்தவர் கீழோர் என்றும் !!
பேதமில்லாது..எல்லோரும் முடிவில் !! 
சேர்ந்திடும் காடு...தொல்லை இன்றியே !! 
தூங்கிடும் வீடு...உலகினிலே இதுதான் !!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் !!
இடமே !!...
                                                                             ( சமரசம்)

ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ?
அறிஞன் எங்கே ? அசடனும் எங்கே ?
ஆவிபோனபின் கூடுவார் இங்கே !!
ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !! ....

                                                                         ( சமரசம்)

சேவை செய்யும் தியாகி !!
ஸ்ருங்கார போகி !!
ஈசன் பொற்பாதம் தன்னை !!
நாடிடும் யோகி !! எல்லோரும் !! 
இங்கே ஒன்றாய்உறங்குவதாலே !!
உண்மையிலே இதுதான் நம் !!
வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !!

                                                                                     ( சமரசம்)


இன்றைய தினம் தமிழக முதல்வர் 
இறுதி சடங்கு நடைபெறுகின்ற இந்த 
நேரத்தில், இந்தப் பாடல் எனது நினைவலையில் எழுந்ததால், நான் இந்தப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

ஆழ்ந்த வருத்தத்துடன் !!

மதுரை. TR.பாலு.


வியாழன், 1 டிசம்பர், 2016

சன் தொலைக்காட்சி நிறுவனநிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!




சன் தொலைகாட்சி நிறுவன
நிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த சட்டமன்றத்தேர்தல் 2016 மே மாதம் 
நடைபெறுவதற்கு முன்பாக, சுமார் 6 மாத 
காலங்களுக்கு முன்பாக வரையிலும் நடிகர் 
விஜயகாந்த்துடன் ஒருவேளை தேர்தல் 
உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நப்பாசையின் 
அடிப்படையில், சன் தொலைகாட்சி, மற்றும் 
அதன் அனைத்து கிளை தொலைகாட்சி 
நிறுவனங்களில், அவரது திரைப்படங்கள் எந்தவித தங்கு தடையுமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. தப்பே இல்லை. இதே காரணத்திற்காகவே நடிகர் சரத்குமார் நடித்த படங்களும் ஒளிபரப்பப் பட்டு வந்தது.  ஆனால், நம்மிடம் (திமுகவிடம்)ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதாக, இந்த இரு 
நடிகர்களும் நாடகமாடி, அதனை தங்களுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆளும் கட்சியோடு, அரசியல் புரோக்கர் கலிங்கப்பட்டி துரோகி மூலம் அதிக தொகை வாங்குவதற்காகவே செயல்பட்டனர் 
என்பது நமக்கு பின்னாளில் தெரியவந்தது. 

எப்படி என்றால், மதுரை கருப்பன் மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணியில் இணைந்ததும், அதுபோலவே நடிகர் ஜாதிக்கட்சி சொந்தக்காரர் சரத்குமார், ஆளும்கட்சியோடு மானம் மரியாதை இழந்து கூட்டு வைத்துக்கொண்டதன் மூலம் வெளிப்பட்டு, அவரவர்கள் செய்த துரோகத்திற்கு 
பலன் கிடைத்ததன் வாயிலாக, ( எப்படி பலன் கிடைத்தது ?அதுவரை மதுரை கருப்பன் நடிகர் விஜயகாந்த் கட்சி பெற்றிருந்த கட்சி அங்கீகாரம், மற்றும் தேர்தல் சின்னம் காப்புரிமை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு இருந்தது, குறைந்த சதவிகிதம் ஒட்டு கூட வாங்கிட 
முடியாத காரணத்தால் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழந்ததன் மூலமாக, கட்சிக்கு கிடைத்திருந்த அங்கீகாரம் 
மற்றும் தேர்தல் சின்ன உரிமை,ஆகியவைகளை 
இழந்து அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர்) மக்களின் பேராதரவை இழந்து தமிழ்நாட்டு அரசியலிலிருந்தே அவர்கள் இருவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட சூழ்நிலையில், 
மீண்டும் அவர்கள் இருவருக்கும் அதாவது செத்துப்போன பாம்புக்கு பால் ஊற்றி உயிர் வர வழைத்திடும் வண்ணம் ஏன்,எதற்காக, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் நடித்த 
படங்களை விடாமல், ஓயாமல்,ஒழியாமல், படங்களை சன் TV மற்றும் சன் லைப் டிவி ஆகியவை வெளியிட்ட வண்ணம் இருப்பதன் காரணம் என்ன ?

திமுகவை கழுத்தறுத்த இவர்கள் படங்களை அங்கே தொலைக்காட்சியில் காட்டுவதுதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் அவரால் அரும்பாடுபட்டு காப்பாற்றப்பட்டு, தமிழனுக்கு,தமிழ் இனத்துக்கு,தமிழ் மொழிக்கு பாடுபடும் ஒரே அரசியல் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காட்டப்படும் 
விசுவாசமா ? இல்லை முத்தமிழ் அறிஞரின் அன்புக்கு பாத்திரராக இருந்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முரசொலி என்ற வார்த்தையை  தனது பெயருக்கு அடைமொழியாக வைத்து திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை வளர்ப்பது ஒன்றே தனது தலையாய களப்பணி மற்றும் 
உயிர்மூச்சு என்று கருதி இறுதிவரை வாழ்ந்து மறைந்த முரசொலி மாறனுக்கு காட்டுகின்ற நன்றிக்கடனா ?

தயவு செய்து பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள 
திரு. கலாநிதி மாறன் அவர்களையும் திரு தயாநிதி மாறன் அவர்களையும் இந்தக் கட்டுரையின் வாயிலாக கேள்வி கேட்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தக் கட்டுரை அவர்கள் இருவரின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ நான் அறிந்திலேன். ஆனால் தயவுசெய்து
இனியாகிலும் அந்த அரசியலில்இரண்டு செல்லாக்காசாகிப்போன நடிகர்களின் படங்களை தொலைக்காட்சியில் திரையிடாமல் 
இருந்து நமது இயக்கத்துக்கு பெருமை சேர்த்துத்தர வேணுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.


திங்கள், 21 நவம்பர், 2016

அடிமேல அடி வைச்சா அம்மிக்கல்லும் தானாக நகரும் !!




அம்மிக்கல்லும் தானாக நகருமா ? எப்படி ?   அது இப்படி !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
காலை வணக்கங்கள் உரியதாக ஆகட்டும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அம்மிக்கல்லும் தானாக நகருமா ? அது எப்படி ?
அது இப்படி !!

இதுதான் அன்பர்களே !! இன்றைய நமது 
வலைத்தளமான " என் மனதிற்குள் புதைந்த 
கருத்துக்கள் " பகுதியில் நான் வெளியிட 
இருக்கும் கட்டுரையின் தலைப்பு.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, இங்கே 
சென்னை S.R.M. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் 
தலைவர் ( Founder President ) பொறுப்பு வகிக்கும் 
ஆளும் கட்சிக்கு மிக,மிக நெருக்கமானவரும் 
மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் 
உண்மை,நேர்மை,சத்தியம்,ஊழல் இவைகளை 
எல்லாம் ஒழித்து, கருப்பு பணத்தை இந்த 
நாட்டைவிட்டே விரட்டி அழித்திடும் வரையில் 
தாம் ஊண்,உறக்கம்,நீர் கூட பருகிட மறுத்து 
விஸ்வாமித்திர முனிவர் பாணியில் இங்கே 
விரதம் எடுத்து வாழ்ந்துவருகின்ற நமது 
அருமைக்கும் பெருமைக்கும் உரிய இந்தியத் 
தலைமை அமைச்சர் ( Prime  Minister of  India )
மரியாதைக்கு உரிய திரு. நரேந்திர மோடியின் 
அரசியல் பங்குதாரரும், இந்த 2016 ம் ஆண்டு 
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு அதன் மூலமாக 51 தொகுதிகளை பெற்று,அந்தஅத்தனை51தொகுதி---யிலும் ஆளும் அண்ணா திமுக வேட்பாளரின் வெற்றிக்கு அரும்பாடு பட்டவரும், பொறுப்புகள் எதுவுமில்லாமல், இங்கே அப்போலோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக 
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் அம்மையாரின் 
அன்புக்கும் ஆதரவிற்கும் ரொம்ப,ரொம்பவே 
நெருக்கமானவரும் , வேண்டப்பட்டவருமான திருவாளர்.பச்சமுத்துவின் ( ஏங்க, ஒரு பக்கா கிரிமினல், பொது மக்களை ஏமாற்றி, அவர்களின் புதல்வர்/புதல்விகட்கு தான் நடத்திவருகின்ற SRM மருத்துவ கல்லூரியில் 
இடம்தருகிறேன் என்று சொல்லி பலநூறு கோடிகள்பணத்தை கொள்ளையடித்த ஒரு ஆளுக்கு இம்புட்டு பில்டப்பா என்று நீங்கள் நினைப்பது எனக்கும் இங்கே புரிகிறது) பகல்கொள்ளைக்கு கூட்டாளியாக பணி
புரிந்தவரும் வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட 
நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.மதன் 
தமிழக காவல்துறையின் மிக நீண்ட தேடுதல் 
வேட்டைக்கு பிறகு நேற்று திருப்பூர் நகரில் அங்கே அவரது காதலி வர்ஷாவின் வீட்டில் வைத்து " லபக் "என்று காவலர்கள் பிடித்தார்கள் என்ற செய்தியை இங்கே தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனக்கு வந்த சிரிப்பை அடக்க நீண்ட நேரம் ஆனது அன்பர்களே.

ஒரு குற்றவாளியை, அவன் தவறு செய்தவன் என்று காவல்துறை முடிவேடுக்குமே ஆனால் அவனை ஒரே நாளில் பிடித்து சட்டத்தின் முன்பாக, நீதிமன்றத்தில் நிறுத்தும் வல்லமை பெற்றிருந்த நமது தமிழக காவல்துறை, ஆளும்கட்சியின் ஏவல்துறையாகமாறியதன் விளைவு !! இந்த பக்காகிரிமினல்பச்சமுத்துவின் 
அந்தரங்ககூட்டாளிமதனை ஆறுமாதகால அவகாசத்திற்குப் பிறகு பிடித்திருக்கிறது என்று 
சொன்னால், இதற்குப்பின்புலம் என்னென்ன இங்கே நடைபெற்றிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இந்த பகல் கொள்ளைக்காரன் பச்சமுத்து, ஆளும் கட்சியின் கூட்டாளி அது மத்திய அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது மாநில அரசாங்கமாக இருக்கட்டும் ( பொதுவாக அன்பர்களே, இவன் போன்ற கொள்ளையர்கள், தாங்கள் அடிக்கும் கொள்ளையில், கணிசமான ஒரு பகுதியை ஆளும் அரசாங்கத்திற்கும் அந்தக்கட்சிக்கும் தாராளமாக தந்தால்தான் இவன் தொழில் இங்கே சரியாக நடக்கும் என்பது இந்தப் பச்சமுத்து போன்ற வழித்தோன்றல்கள் ஏற்கனவே கண்டுபிடித்து செயல் படுத்திய முறைதான்-அதே பாணியைத்தான் இங்கே திருவாளர் பச்சமுத்துவும் கையாண்டிருக்கிறார்) 
ஆகவே, அவ்வளவு விரைவில் இவன் பிடிபட காவல்துறை அனுமதிக்காது. கொள்ளைக்காரன் பச்சமுத்துவின் அந்தரங்க உதவியாளர் மதன் தாயார் சென்னை உயர்நீதி மன்றத்தில், ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்து அதனை 
ஆளும்தரப்பில்வந்தஅத்தனைமிரட்டல்களை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் உயிர் 
பயமுறுத்தல்களையும் துச்சமாக மதித்து, தொடர்ந்து வழக்கை நடத்தியதால் மட்டுமே இந்த மதன் இங்கே பிடிபட்டுள்ளார் என்பது உண்மை. ஆறுமாதமா ஒரு கிரிமினல் குற்றவாளியை பிடிப்பதற்கு ? அதுவும்கூட 
உயர்நீதிமன்றம் வருகின்ற 29ம் தேதிக்குள்ளாக தமிழக காவல்துறை மதனை பிடிக்கவில்லை என்று சொன்னால்,தாங்கள் வழக்கை C.B.I. (Central Bureau of Investigation ) என்ற மத்திய அரசாங்கத்தின் காவல்துறை வசம் ஒப்படைத்து 
விசாரிக்க நேரிடும் என்று இறுதி எச்சரிக்கை கொடுத்து ,அதன்பிறகே கொள்ளைக்காரன் பச்சமுத்துவின் அந்தரங்க செயலாளர் மதன் பிடிபட்டுள்ளார் என்று சொன்னால்,எந்த அளவிற்கு இங்கே மாநில அரசாங்கமும் சரி அதன் ஏவல்களுக்கு அடிபணிந்து நடக்கும் காவல்துறையாக இருக்கட்டும், எப்படி இந்த பச்சமுத்துவிற்கு அடிபணிந்து ஒத்துழைப்பு நல்கியுள்ளார்கள் என்பதை சிந்தித்துப் 
பாருங்கள் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

எங்கே வழக்கு CBI வசம் போய்விட்டால், நம்முடைய அத்தனை வண்டவாளங்களும் தண்டவாளத்தில் இங்கே ஏற்றப்பட்டுவிடுமே, என்று அதற்குப் பயந்துதான் நேற்று 
மதன் பிடிபட்டுள்ளாறே தவிர வேறு எதுவும் இல்லை.

அதனால்தான் நான் இந்த கட்டுரைக்கு :-

அடிமேல அடி வைச்சா அம்மிக்கல்லும் தானாக நகரும் !!அது எப்படி ? அது இப்படி !!
என்று தலைப்பு கொடுத்து பதிவு செய்துள்ளேன் என்று சொல்லி, இன்றைய பொழுது எனது அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த நல்ல பொழுதாக அமைந்திட வேண்டும் என்று வாழ்த்தி உங்களிடம் இருந்து இந்த அளவில் விடை பெறுகின்றேன் எனதன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.






திங்கள், 1 ஆகஸ்ட், 2016

தாயாலே வந்தது !! தீயாலே வெந்தது !!






தாயாலே வந்தது !!
தீயாலே வெந்தது !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நேற்றையதினம் புதுடெல்லி மாநிலங்கள் 
அவையில், வீசிய பெரும்புயலைப் பற்றி 
என் மனதிற்குள் உதித்த எண்ணங்களை 
உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

திருமதி. சசிகலா புஷ்பா என்ற அண்ணா திமுக 
மாநிலங்களவை உறுப்பினர், தனக்கு நேர்ந்த 
உண்மைச் சம்பவங்களை, கண்ணீருடன் 
கரகரத்த குரலுடன் பேசியதைக் கண்டால்,
கல்மனதும் கரைந்திடும். எந்த அளவிற்கு 
அவர், கட்சித்தலைமையால் பாதிக்கப்பட்டு,
வேதனைக்குள்ளாகியிருந்தால், இதுபோல
பொது இடத்தில் தன்னுடைய வேதனைகளை 
சொல்லியிருப்பார் என்பது சிந்திக்க வேண்டிய 
விஷயம்தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இறைவனால் 
படைக்கப்பட்ட இந்த உலகில், எதனால் எது 
உருவாகிறதோ, அதனால் அது அழிக்கப்படுகிறது
என்பதே உண்மை. 

அது போல, திருமதி சசிகலா என்ற ஒருவரால்,
( ஜெ.யின் தோழி) எப்படி அண்ணா திமுக என்ற 
இயக்கம் இயக்கப்பட்டு இன்றளவும் வழிநடத்தி 
செல்லப்படுகிறதோ, அதே பெயருடைய மற்றும்
ஒருவரால் ( திருமதி.சசிகலா புஷ்பா) அஇஅதிமுக அழிவுப்பாதை நோக்கி செல்கிறது என்பதே உண்மை.அதனாலேயே இந்த நேரத்தில், இந்தக்கட்டுரையை எழுதிட முற்பட்டேன்.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

திங்கள், 13 ஜூன், 2016

வெற்றி பெற்றது மதுவின் அரசாட்சி !! தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!






வெற்றிபெற்றதுமதுவின்அரசாட்சி  !!
தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!





அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் இனிமை நிறைந்த காலை 
வணக்கங்கள்.

நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் 
தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து தேர்தல் 
முடிவுகள் பற்றிய கருத்துக்கணிப்புக்கள், அது 
தேர்தலுக்கு முந்தியதாக இருந்தாலும் சரி, 
அல்லது பிந்தியதாக இருந்தாலும் சரி, எல்லா 
கணிப்புக்களும் என்ன சொன்னது என்றால் 
தி.மு.க. தலைமையிலான கூட்டணி அனேக 
இடங்களைக் கைப்பற்றும் அதுவேஆட்சியையும் 
பிடிக்கும் என்றே மக்களுக்கு தகவல் தந்தது.


ஆனால், முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியில் 
வந்த வேளையில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போனதாகவே நடந்தது. இது ஏன்,எப்படி நடந்தது, என்பதை அரசியல் ரீதியாக நாம் அலசி ஆராயந்திடத்தான் இந்த கட்டுரை உங்களுக்குத் தரப்படுகின்றது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

திராவிட முன்னேற்றக்கழகம் இந்த தேர்தலில் 
தோல்வியைத் தழுவியதற்கு, நான் சொல்லும் 
முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த 
கட்சி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும் 
போடுகின்ற முதல் கையெழுத்து எதற்கு என்று 
கேட்டால், தமிழகத்தில் " முழு மது விலக்கு "
என்ற கோப்பில்தான், என்று மேடைக்கு மேடை 
தளபதி திரு. மு.க. ஸ்டாலின் முழங்கியதுதான் 
என்பதே எனது கணிப்பு அன்பர்களே.

தமிழ்நாட்டில், முதன்முதலாக, 1971 ம் ஆண்டு 
மது விலக்கு தளர்த்தி தாராளமாகமதுவிற்பனை 
செய்திடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.அதன் 
பிறகு அதன் கொடுமை, ஏழை மக்கள் தங்களது 
வருமானம்அனைத்தையும்வீட்டுசெலவுகளுக்கு 
தராமல், குடித்தே காலி செய்கின்றனர் என்ற விபரம் அறிந்த அரசாங்கம் மீண்டும் 1974ம் ஆண்டு முதல் முழுமதுவிலக்கு அமல் செய்திடப்பட்டது.

அதன் பிறகு, தி.மு.க. வை உடைத்து, தனியாக 
அண்ணா தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி 
ஆட்சியைப் பிடித்த மறைந்த நடிகர் MGR இங்கே 
மீண்டும் 1980 ம் ஆண்டு வாக்கில் மது விற்பனை 
செய்திட அனுமதித்தார் என்பது வரலாறு.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக, குடித்துக்குடித்துப் பழக்கப்பட்ட ஒருவன் (அப்போது அவன் வயது சுமார் 20 என்று வைத்துக்கொள்வோம். இன்று அவனது வயது 56. ஆக இன்று 15 வயது பையன் முதல் 56 வயது வரை குடிகாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்) 
திமுக மீண்டும்இங்கே ஆட்சிக்கு வந்தால் இங்கே இனிமேல்  மது விற்பனை தடை செய்யப்பட்டு விடும்  என்ற நிலைமையை உணர்ந்த அந்தக் குடிகாரர்கள் சமுதாயம் தங்களது வாக்குகளை கட்சி பேதம் இல்லாமல், ஆளும் அஇஅதிமுக வுக்கு வாக்களித்தார்கள். அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.இதுதான் உண்மை.

அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் யாரும் மக்களுக்கு நல்லது செய்திடும்வகையில் தேர்தல் அறிக்கையில்திட்டங்களை அறிவித்தால், அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை இந்தத் தேர்தல் மிகத்தெளிவாக 
படம் பிடித்துக் காட்டி விட்டது என்பதே உண்மை.

ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் 

வெற்றிபெற்றதுமதுவின் அரசாட்சி !!
தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!

என்று சொல்லி எனது கட்டுரையை நான் நிறைவுசெய்கிறேன்அன்புத்தமிழ்நெஞ்சங்களே!!

நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. T.R. பாலு.

வியாழன், 12 மே, 2016

தமிழக வாக்காளப் பெருமக்களே !! பொறுத்தது போதும் !! பொங்கி எழுந்திடுவீர் !!






பொறுத்தது போதும் !! பொங்கி எழுந்திடுவீர் !!



எல்லாப் புகழும் இறைவனுக்கே !!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

அது 1955 ம் ஆண்டு. முத்தமிழ் அறிஞர் 
தலைவர் கலைஞர் அவர்களின் கை 
வண்ணத்தில், வசனத்தில், தமிழ்த் 
திரை உலகையே புரட்டிப்போட்ட ஒரு 
சுனாமி திரைப்படம்தான் " மனோகரா ".

அதில் இறுதிக்காட்சியில், மனோகரனின் 
(சிவாஜி கணேசன்) தாயார் ஆந்திர நடிகை 
கண்ணாம்பாள், தனது புதல்வனுக்கு அங்கே 
இராஜசபையில், நடைபெறுகின்ற அநியாயம்,
அக்கிரமங்களை எதிர்த்து போராடுகின்ற 
உத்திரவு ஒன்றினை வழங்குகின்ற விதமாக 
சொல்லிய வாசகம்தான் அன்பர்களே இன்று 
நமது கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு 
உள்ளது. அதுதான் :-

பொறுத்தது போதும் !!பொங்கி எழு !!
அதை நான் இன்றைய தினம் தமிழக வாக்காளப் 
பெருமக்களுக்கு மீண்டும் நினைவு படுத்திடக் 
கடமைப்பட்டு உள்ளேன்.

கடந்த 2011 ம் ஆண்டு முதல் நடப்பு 2016 ம் ஆண்டு 
வரையிலான5ஆண்டுகளாகஇங்கேதமிழகத்தில் நடைபெற்று வருகின்ற அல்லி ராணியின்காட்டு 
தர்பார் ஆட்சிக்கு நல்லதொரு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் தலைவர் கலைஞர்அவர்களின் நல்ல ஆட்சி மலர்ந்திட, நீங்கள் அனைவரும் தி.மு.க. மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே உங்களது பொன்னான வாக்குகளை அளித்து  தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட ஆவன செய்திடுங்கள்என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு நன்றி கூறி 
விடைபெறுகின்றேன்.

வணக்கம்.

அன்புடன். மதுரை T.R. பாலு.


ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

கடைசியில் அனைத்துக் கழிசடைகளும் ஒன்றாக இணைந்துள்ளன !!






கழிசடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த ஆண்டின் இறுதி மாதம் சென்னையில் 
நாற்றத்தை மட்டுமே வழங்கிக்கொண்டிருந்த கூவம் ஆற்றில், பல இடங்களில் இருந்து வந்த அனைத்துக்கழிசடைகளும் ஒன்றிணைந்து சங்கமம் ஆவதை நாம் பார்த்திருந்தோம்.           

(இந்த இடத்தில் நீங்கள் நடைபெற உள்ள தமிழக தேர்தல் களத்தில் மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் ஒன்று இணைந்ததைமனதில்எண்ணிக்கொண்டால் அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல )                                             

அப்போது பலகாலமாக நாம் கண்டிராத வகையில் பெய்த கடுமையான மழை வெள்ளத்தில்அந்தக்கூவத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துக் கழிசடைகளும் காணமல் போய் கூவம் ஆறே படு சுத்தமாக காட்சி அளித்ததையும் நாம் கண்டு மகிழ்ந்தோம்.                                                 

(இந்த இடத்தில், எதிர்வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அந்த ம.ந.கெடுக்கும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்களதுவைப்புத்தொகைதனை பறிகொடுத்து வரலாறு காணாத தோல்வியை சந்தித்து காணாமல் போய் விடுவர் என்று நேயர்களாகிய நீங்கள் நினைத்துக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல )           

பொதுவாக நமது முன்னோர்கள் சொல்வார்கள், எதிர்காலத்தில் எது நடக்க உள்ளதோ, அது சிற்சில சம்பவங்கள் மூலமாக இயற்கை நமக்கு முன்கூட்டியே உணர்த்திவிடும் என்று.                       அதுதான் அன்பர்களே இப்போது நமது குடுகுடுப்பைக்காரன் துரோகி கோபாலு தலைமையில் ஏற்பட்டுள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக்கட்சிகளும் தேர்தல் முடிந்தவுடன் அந்தக்கையோடு காணமல் அநேகமாக அந்தமான் தீவு சென்று அங்கேயே குடியேறிடும் என அடித்து ஆணித்தரமாக கூறிடக் கடமைப் பட்டு உள்ளேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!


ஆதரிப்போம் உதயசூரியன் சின்னத்தை !!                  


நன்றி !! வணக்கம் !!                                                               


அன்புடன். மதுரை. TR. பாலு.

சனி, 12 மார்ச், 2016

ஆப்பசைத்த குரங்கு போல ஆனார் விஜயகாந்த் !!





எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


ஆப்பசைத்த குரங்கு ஆனார் விஜயகாந்த் !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

தமிழக தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக 
சூடு பிடிக்கத் துவங்கிவரும் இந்த வேளை
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் 
காத்திருந்தது தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.
கூட்டணி ஏற்படும் என்று மட்டுமே. ஆனால் 
அதற்கு மாறாக,திடீர் திருப்பமாக, தேமுதிக 
நிறுவனர் தலைவர் விஜயகாந்த் இந்தமுறை 
தமிழக சட்டமன்றத்தேர்தலில் தமது கட்சி 
தனித்தே போட்டியிடும் என்று பெரிய பேரிடி 
அறிவிப்பினை, அவரது கட்சியின் மகளிர்தின 
அரசியல் மகாநாட்டில் அறிவித்து தமிழக 
தேர்தலில் களத்தில் ஒரு புதுக்குழப்பத்தை 
ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும்.

எதை எதிர்பார்த்து, அவர் இப்படியொரு அதிரடி 
அறிவிப்பினை வெளியிட்டிருப்பார் என்பதை 
நாம் அலசி ஆராய்ச்சி செய்தால் நமக்கு விடை 
கீழ்க்குறித்த இந்த மூன்று அம்சத்தைத்தவிர வேறு ஒன்றும் வர வழிவகை இல்லை.

1) இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது 
திமுக தலைமையை தனது எதிர்பார்ப்பு வரம்பு
அதற்குள்ளாக கொண்டு வரவேண்டும்.
2)  இரகசியமாக அக்கட்சியோடு, தான் கூட்டணி 
பேச்சுவார்த்தை நடத்தியபோது, தான் முன்வைத்த ஏற்க முடியாத கோரிக்கைகளை, மீண்டும் அக்கட்சி (திமுக) பரிசீலனை செய்திட வைத்த்திட இந்தவகை அதிரடி அறிவிப்பு நிச்சயம் பலன்தரும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை.
3)  தனக்கு எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு உண்டு என்பதை கணக்கில் கொள்ளாமல், தனக்கு ஏதோ ஒரு மாபெரும் இமாலய பலம் இருப்பது போலவும் எனவே அதை திமுக தலைமை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதற்காக இதை இப்படிப்பட்ட 
ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

சரி. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் விஜயகாந்த் எதிர்பார்த்த மேலே குறிப்பிட்டுள்ள மூன்று விஷயங்களை திமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதா ? என்பதை நாம் முதலில் 
பார்ப்போம்.

திமுக எனும் கட்சி கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் 
அரசியல் அனுபவம் பெற்றுள்ள ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இந்த காலகட்டத்தில் அவர்கள் விஜயகாந்த் போன்று எத்தனை எத்தனயோ நபர்களை அவர்கள் அரசியல் வாழ்வினில் சந்தித்து அதன்மூலம் மாபெரும் அனுபவம் பெற்றவர்கள். மாபெரும் 
சக்தியாக1970களில்விளங்கியMGராமச்சந்திரனையே திமுக எந்த ஊர் வந்து பார் என்று கேள்விகேட்ட கட்சி அது.அதன்மூலம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பதவியை 
இழக்க நேரிட்டாலும் அதற்காக கொள்கையை விட்டுத்தந்திடாத இயக்கம் திமுக.

ஏதோ இவர் (விஜயகாந்த்)ஒரு 6 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கிறார், மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தருவதில் அந்த வாக்கு வங்கி நல்லதொரு பலனை பெற்றுத்தரும் என்பதற்காகவே, விஜயகாந்த் இழுத்த 
இழுவைக்கெல்லாம் திமுக வளைந்து கொடுத்து 45 தொகுதியில் பேரத்தைத்துவக்கி கிட்டத்தட்ட 
59 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை விட்டுத்தர 
சம்மதித்தாலும் அதனை உதாசீனம்செய்திடும் 
வகையில் விஜயகாந்த் நடந்திருப்பது என்பது 
கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல கண்டிப்புக்கும் உரியதே.  

இப்போது பிஜேபி கட்சியைப்பொருத்தவகையில்,
ஒரு தேசிய கட்சி என்பது பட்டவர்த்தமாக மாநில
கட்சியைத் தலைமைபொறுப்பில் ஏற்றுக் கொண்டு அதன்கீழ் சட்டமன்றத் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளுமா ? என்பது 
சந்தேகமே.

மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணி ஒரு குறைப் 
பிரசவத்தில் பிறந்த, தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கொண்டிருக்கும் கட்சியே ஆகும். எந்த நேரம் இழவு வரும் என்பது எவராலும் சொல்ல முடியாதது போல, எந்த நேரம் இந்த பிணி மன்னிக்கவும் இந்த அணி 
உடைந்து சுக்கு நூறாகும் என்பது அதில் உள்ள 
துரோகி வைகோ உட்பட யாரும் அறிந்திடாத 
ஒன்றே ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி சில கட்டளைகளுடன் 
பிஜேபியோடு மட்டுமே கூட்டு சேர்ந்து தேர்தலில் 
போட்டியிடும். விஜயகாந்த் நிழல்கூட அந்த 
பா.ம.க.விற்கு ஆகாது.

இப்படிப்பட்ட சூழலில் திமுக தன்னை மீண்டும் 
நாடி, ஏற்கவே முடியாத வேண்டுகோள்களை 
ஏற்கும், அதற்கு வேறு வழி இல்லை என்று தப்புக்கணக்கு போட்டு அதன்வாயிலாக 
தேமுதிக அறிவித்த தனித்துப்போட்டி என்ற அறிவிப்பு தற்போதுவரை, திமுக வால் கண்டுகொள்ளப்படாத ஒரு நிலையில், விஜயகாந்த் நிலைமை என்பது 

ஆப்பசைத்த குரங்கு போன்றதே !!

இதுதான் என்போன்ற அரசியல் ஆர்வலர்களும் 
போடுகின்ற கணக்கு ஆகும் என்று கூறி உங்கள் 
அனைவரிடம்இருந்துநன்றிகூறிவிடைபெறுவது 
உங்கள் அன்பன். திருமலை. இரா. பாலு. 

புதன், 13 ஜனவரி, 2016

தமிழர்களின் வீர விளையாட்டு தடை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான் !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் மேல்நாட்டு கார்ப்பரேட் நிறுவங்களின் கூட்டு சதிதான். 

இதில் திரு நரேந்திரமோடிக்கும் முதல்வர் 
ஜெயலலிதாவுக்கும் கணிசமான  "பங்கு" இருக்கிறது.

அதனால்தான் இங்கே தமிழ்நாடு அரசும் கடந்த ஒண்ணரைஆண்டுகளாக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவே 
இல்லை. 

நரேந்திரமோடியைப் பற்றி நாம் சொல்லவே வேண்டாம்.அவர் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர் ஆவார்.

ஆக, இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து செய்த கூட்டு சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசிதழில் வெளிவந்த குறிப்பு ஆணை.

தமிழர்கள் என்றால் கூமுட்டைகள், இளிச்சவாயன்கள்,மண்டையிலே சுத்தமா மூளை என்ற ஒன்று இல்லாதவங்க என்பதுதான் மோடி & லேடியின் கணிப்பு. 

ஆனால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஒரு சாட்டையடி கொடுக்க தமிழர்கள் மனதில் முடிவெடுத்து விட்டார்கள்.

காலம் நல்லதோர் பதிலைத் தரும்.
அதுவரை நடப்பதை பொறுமையுடன் பார்த்து வருவோம்.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.